பிள்ளை ஒளிப்படவியல்![]() பிள்ளை ஒளிப்படவியல் அல்லது குழந்தை ஒளிப்படவியல் (Child Photography) என்பது, ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் பொதுவான பிள்ளைகளைப் ஒளிப்படம் எடுக்கும் ஒரு சிறப்புப் பிரிவாகும், இதில் குழந்தைப் பருவத்தின் ஒருமை, வளர்ச்சி மற்றும் தனித்துவமான தருணங்களை பதிவுசெய்வது அடங்கும். குழந்தை ஒளிப்படவியலின் நோக்கம், குழந்தை பருவத்தின் அழகையும், மகிழ்ச்சியையும், இயற்கையான உணர்ச்சிகளையும் ஒளிப்படம் மூலம் அதை ஒரு தனித்துவமான கலைப்படைப்பாக மாற்றுவதாகும்.[1] பிள்ளைகள் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயற்கையாகப் பிரதிபலிக்கும் போது எடுக்கப்படும் ஒளிப்படங்கள், குழந்தை ஒளிப்படவியலின் ஒரு முக்கிய அங்கமாகும். பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குடும்பக் கொண்டாட்டங்கள், பள்ளிக்கூட நிகழ்வுகள் போன்ற முக்கிய தருணங்களை பதிவு செய்வது, பிள்ளை ஒளிப்படவியலின் ஒரு பகுதியாகும். பெற்றோர், சகோதரர், சகோதரி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடனான பிள்ளைகளுக்கிடையேயான பாசப்பிணைப்பை படம் பிடித்துக் காட்டுவது, குழந்தை ஒளிப்படவியலின் சிறப்புகளாகும். மேலும் இது ஒரு அழகான படத்தைப் படம் பிடிப்பது மட்டுமல்ல - இது ஒரு நீடித்த உணர்ச்சி ரீதியான தொடர்பை உருவாக்குவது, உங்கள் குழந்தையின் அடையாளத்தை வடிவமைக்க உதவுவது மற்றும் அவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதற்கான காட்சி கதையை அவர்களுக்கு வழங்குவது பற்றியதாகும்.[2] கலை மற்றும் நுட்பம்பிள்ளை ஒளிப்படவியலில், நல்ல ஒளி அமைப்பு, வண்ணச் சமநிலை மற்றும் ஒளிப்படவியலின் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை ஒளிப்படங்களுக்கு அழகையலையும் தனித்துவத்தையும் சேர்க்கின்றன. பிள்ளைகளின் முகம், கண்கள், உடல் மொழி போன்றவற்றை கவனத்தில் கொண்டு ஒளிப்படம் எடுப்பதன் மூலம், ஒரு குழந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்துவது , குழந்தை ஒளிப்படவியலின் முக்கிய நோக்கம் ஆகும். மேலும் பிள்ளை ஒளிப்படவியல் மூலம், ஒரு பிள்ளையின் வளர்ச்சியின் தொடக்கம் முதல் கடைசி வரை பதிவு செய்து, எதிர்காலத்தில் அதை ஒரு நினைவுக் கலைக்கூடமாக பயன்படுத்தலாம்.[3]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia