கம்போங் பாரு
கம்போங் பாரு (ஆங்கிலம்: Kampung Baru; மலாய்: Kampong Bharu; சீனம்: 甘榜峇鲁) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையப் பகுதிக்கு அருகில் அமைந்துள ஒரு பறநகர்ப் பகுதியாகும். இந்தப் பறநகர்ப் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள் ஆவார்கள். கம்போங் பாரு என்பது ஒரு மலாய் மொழிச் சொல் ஆகும்; புதிய கிராமம் என பொருள்படும். பொது1899-ஆம் ஆண்டில் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் அலாதீன் சுலைமான் சா (Sultan Alaeddin Suleiman Shah) அவர்களின் அரசுரிமையின் கீழ் கம்போங் பாரு எனும் கிராமம் மலாய்க்காரர்களுக்கானவேளாண் குடியேற்றமாக (Malay Agricultural Settlement) உருவாக்கப்பட்டது. கிராமம் உருவாக்கப்பட்டது குறித்து 1950-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது.[1][2] அப்போதிருந்து, கம்போங் பாருவின் வளர்ச்சி என்பது; நவீன நகர வாழ்க்கைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அந்த வகையில் அதுவே மலாய்க் கலாச்சாரத்தின் அரசியல் அடையாளமாகவும் மாறியது.[3] விடுதலை ஆதரவு இயக்கம்இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வளர்ந்த விடுதலை ஆதரவு இயக்கத்தின் போது மலாய் அரசியலில் இந்தக் கம்போங் பாரு பகுதி ஒரு சிறப்பு இடத்தை வகித்தது. கம்போங் பாருவில் சுல்தான் சுலைமான் மன்றம் உள்ளது. அந்த மன்றத்தில்தான் பிரித்தானிய காலனித்துவ எதிர்ப்பு அரசியல் கூட்டங்கள் அடிக்கடி நடைபெற்றன.[4] பிரித்தானிய காலனித்துவ எதிர்ப்பு அரசியல் கூட்டங்களின் வழியாக, ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு எனும் அம்னோ மலேசியாவின் அரசியல் கட்சியும் உருவானது காட்சியகம்மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia