நேபாளத்தின் மாநில எண் 4-இல் அமைந்த கோர்க்கா மாவட்டம்
கோர்க்கா மாவட்டம் (Gorkha District) (நேபாளி: गोरखा जिल्लाListenⓘ), நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும்.
இம்மாவட்டம் நேபாளத்தின் மேற்கு பிராந்தியத்தின், நேபாள மாநில எண் 4-இல் கண்டகி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பிரிதிவி நாராயணன் நகரம் ஆகும்.
கோர்க்கா மாவட்டம் 3,610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 272069 மக்கள் தொகையும் கொண்டது.[1] இம்மாவட்டத்தில் புகழ் பெற்றா மனகாமனா கோயில் அமைந்துள்ளது. [2]இம்மாவட்டத்தில் வாழும் குருங், நேவாரிகள், மகர்கள் மற்றும் செட்டிரி மக்கள் நேபாளி மொழி, நேவாரி மொழி, காலே மொழி மற்றும் மகர் மொழிகள் பேசுகின்றனர்.
இம்மாவட்டத்தில் கோரக்க சித்தரின் கோயில், கோரமான காளி கோயிலும் அமையப் பெற்றுள்ளது.
இம்மாவட்டத்தில் செப்பி, தரௌதி, மர்ச்சியாந்தி மற்றும் புத்தி கண்டகி என நான்கு ஆறுகள் பாயும் இப்பகுதியில் கோர்க்கா நாடு அமைந்திருந்தது.
பெயர்க் காரணம்
கோர்க்கா எனும் இம்மாவட்டத்திற்கு பெயர் அமைய இரண்டு தொன்மக் கதைகள் கூறப்படுகிறது.
நேபாள மொழியில் கார்க்கா என்பதற்கு மேய்ச்சல் நிலம் என்று பொருள். பின்னர் இப்பெயர் மருவி கோர்க்கா எனப் பெயராயிற்று.
கோரக்க சித்தர் இப்பகுதியில் வாழ்ந்த காரணத்தினால் இப்பகுதியை கோர்கா எனப் பெயராயிற்று.