கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Terengganu; ஆங்கிலம்: Kuala Terengganu Federal Constituency; சீனம்: 瓜拉登嘉楼国会议席) என்பது மலேசியா, திராங்கானு, கோலா திராங்கானு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P036) ஆகும்.[8] கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] கோலா திராங்கானு மாவட்டம்கோலா திராங்கானு மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் கோலா நெருசு மாவட்டம், தெற்கில் மாராங் மாவட்டம்; மற்றும் கிழக்கில் தென்சீனக் கடல், திராங்கானு ஆறு ஆகியவை எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா திராங்கானு ஆகும். கோலா திராங்கானுதிராங்கானு மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமாகவும்; அரசத் தலைநகரமாகவும் கோலா திராங்கானு விளங்குகிறது. இந்த நகரத்திற்கு 2008 சனவரி 1-ஆம் தேதி கரையோர மரபுரிமை நகரம் எனும் மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. இந்த நகரம், திராங்கானு மாநிலத்தின் முக்கியமான அரசியல், பொருளாதார மையமாக இருப்பதுடன், மாநிலத்தின் பல சுற்றுலா மையங்களுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள கம்போங் சீனா, பசார் பெசார் கெடாய் பாயாங் (Pasar Besar Kedai Payang), திராங்கானு மாநில அருங்காட்சியகம், பத்து பூரோக் கடற்கரை (Batu Buruk Beach) போன்றவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாக உள்ளன. கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி
கோலா திராங்கானு தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia