டுங்குன் மக்களவைத் தொகுதி
டுங்குன் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Dungun; ஆங்கிலம்: Dungun Federal Constituency; சீனம்: 龍運國會議席) என்பது மலேசியா, திராங்கானு, டுங்குன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P039) ஆகும்.[8] டுங்குன் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து டுங்குன் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] டுங்குன் மாவட்டம்டுங்குன் மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்; திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். அவற்றில் தென்சீனக் கடலை ஒட்டிய மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா டுங்குன் (Kuala Dungun). 1940-ஆம் ஆண்டுகளில் டுங்குன் ஓர் இரும்புச் சுரங்க நகரமாக இருந்தது. மேற்கில் அமைந்துள்ள புக்கிட் பீசி (Bukit Besi) என்ற சிறிய நகரத்தில் இரும்புத் தாது எடுக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் டுங்குன் நகரம் ஒரு துறைமுகம நகரமாகச் செயல்பட்டது. அங்கு இருந்து இரும்புத் தாதுப் பொருள்கள் கப்பல்களுக்கு மாற்றப்பட்டன. கோலா டுங்குன்சுரங்கத் தொழிலுக்கு பெயர் பெற்ற டுங்குன் மற்றும் புக்கிட் பீசி நகரங்கள், தொடருந்து பாதையால் இணைக்கப்பட்டு இருந்தன. அந்தத் தொடருந்து பாதை உள்நாட்டு கிராம மக்களுக்கும், வணிகச் செயல்பாடுகளுக்கும் பொது போக்குவரத்துச் சேவையை வழங்கி வந்தது. 1980-ஆம் ஆண்டுகளுடன் டுங்குன் நகரின் பொற்காலம் முடிந்தது. அங்கு இருந்த சுரங்கங்கள் படிப்படியாக மூடப்பட்டன. அதன் விளைவாக அங்கு செயல்பட்டு வந்த சுரங்க நிறுவனம் அப்பகுதியை விட்டு வெளியேறியது; தொடருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. புக்கிட் பீசி இப்போது அரசாங்க நிதியுதவி பெற்ற செம்பனைத் தோட்டங்களுடன் செயல்படுகிறது. டுங்குன் மக்களவைத் தொகுதி
டுங்குன் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia