உலு திராங்கானு மக்களவைத் தொகுதி
உலு திராங்கானு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Hulu Terengganu; ஆங்கிலம்: Hulu Terengganu Federal Constituency; சீனம்: 乌鲁登嘉楼国会议席) என்பது மலேசியா, திராங்கானு, உலு திராங்கானு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P038) ஆகும்.[8] உலு திராங்கானு மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து உலு திராங்கானு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] உலு திராங்கானு மாவட்டம்உலு திராங்கானு மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் உட்புறத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா பேராங். மாநிலத் தலைநகரான கோலா திராங்கானுவில் இருந்து சுமார் 40 கி.மீ. (25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கம்போங் சுங்கை பேருவாநிலப்பரப்பின் அடிப்படையில் உலு திராங்கானு மிகப்பெரிய மாவட்டம். இது திராங்கானு மாநிலத்தில் கடலை ஒட்டி இல்லாத ஒரே மாவட்டமாகும். மலேசிய உள்ளாட்சி சட்டம் 1976 (சட்டம் 171) (திருத்தம் 1978)-இன் 3-ஆவது பிரிவின் கீழ் (3rd Section of Local Government Act 1976 (Act 171) (Amendment 1978); 1 சனவரி 1981-இல் உலு திராங்கானு மாவட்ட மன்றம் நிறுவப்பட்டது. இதற்கு முன் இந்த மாவட்டம் பண்டாரான் உலு திராங்கானு (Bandaran Ulu Terengganu) என்று அழைக்கப்பட்டது. 1982 ஆகத்து மாதம் 30-ஆம் தேதி, முன்னாள் திராங்கானு மந்திரி பெசார் வான் மொக்தார் அகமத் அவர்களால், புதிய மாவட்ட மன்றம் முறையாகத் தொடங்கப்பட்டது. உலு திராங்கானு மாவட்டத்தில் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பழங்குடியினருக்கு ஒரு கிராமம் உள்ளது. அதன் பெயர் கம்போங் சுங்கை பேருவா (Kampung Sungai Berua).[10] உலு திராங்கானு மக்களவைத் தொகுதி
உலு திராங்கானு தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia