கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி
கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Nerus; ஆங்கிலம்: Kuala Nerus Federal Constituency; சீனம்: 瓜拉尼鲁斯国会议席) என்பது மலேசியா, திராங்கானு, கோலா நெருஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P035) ஆகும்.[8] கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9] கோலா நெருஸ் மாவட்டம்கோலா நெருஸ் மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இந்த மாவட்டம் மிகப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மாவட்டமாகும். 2014-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. முன்பு கோலா திராங்கானு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கோலா நெருசு மாவட்டத்தின் தலைநகரம் கோலா நெருஸ் நகரம். கோங் படாக், செபெராங் தாகிர், பத்து ராகிட் மற்றும் பத்து என்னாம் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள் ஆகும். ரெடாங் தீவுக்கூட்டமகோலா நெருஸ் மாவட்டத்தில் ரெடாங் தீவுக்கூட்டம (Redang archipelago) உள்ளது. ரெடாங் தீவு மற்றும் பினாங்கு தீவு (Pinang Island) ஆகியவை இரண்டும் முக்கிய தீவுகள். மக்கள் வசிக்கும் தீவுகள். ரெடாங் தீவுக்கூட்டம் தென் சீனக் கடலில் உள்ள கோலா திராங்கானுவில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. 1994-ஆம் ஆண்டு ரெடாங் தீவுக்கூட்டம் ஒரு கடல் பூங்காவாக நியமிக்கப்பட்டது. மலேசியாவில், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும் மற்றும் நீருக்கடியிலான இயற்கைத் தன்மையை அனுபவிக்க மக்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்காக அந்தக் கடல் பூங்கா நிறுவப்பட்டது.[10] கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி
கோலா நெருஸ் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia