சத்யநாத தீர்த்தர்
சிறீ சத்யநாத தீர்த்தர் (Satyanatha Tirtha, அண்.1648 - அண். 1674[2]) மேலும் சத்யானந்த யதி எனவும் அபினவ வியாசராஜர் எனவும் அழைக்கப்படும் இவர், இந்து மத தத்துவவாதியும், தத்துவ அறிஞரும், தர்க்கவியலாலரும், இயங்கியல் வல்லுநரும் ,துவைத வேதாந்தத்தின் அறிஞருமாவார். [3] இவர் 1660 முதல் 1673 வரை உத்தராதி மடத்தின் இருபதாம் துறவியாக இருந்தார். [4] இவர் ஒரு வலுவான, செழிப்பான எழுத்தாளரும், துவைத வேதாந்தத்தின் மகிமையை மிகவும் விரும்பியவராகவும் இருந்தார். மத்வாச்சாரியார், ஜெயதீர்த்தர், வியாசதீர்த்தர் ஆகியோரின் படைப்புகளை இவர் தெளிவுபடுத்தியதன் காரணமாக, இவர் துவைத சிந்தனைப் பள்ளியின் வரலாற்றில் ஒரு முக்கியமான பங்கேற்பாளராகக் கருதப்படுகிறார். [2] [5] அபிநவம்ருதம், அபிநவ சந்திரிகா, அபிநவா தர்க தாண்டவம் ஆகிய இவரது மூன்று விவாதப் படைப்புகள் "வியாசத்ராயா"வை (துவைத சித்தாந்தத்தின் மனித-சிங்கத்தின் மூன்று கண்கள்) நினைவூட்டுகின்றன. [3] இவரது விவாதப் படைப்புகளான அபிநவ கதை மத்வ சித்தாந்தத்தில் அப்பைய தீட்சிதரால் தூண்டப்பட்ட இறையியல் சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் பணியாகும். [note 2] [note 3] [3] [8] இவரது சுயாதீனமான கட்டுரையான அபிநவ சந்திரிகா பிரம்ம சூத்திரங்கள் தொடர்பான ஒரு அற்புதமான படைப்பாகக் கருதப்படுகிறது. இது ஜெயதீர்த்தரின் தத்வபிரகாசிகா பற்றிய வர்ணனையாகும். [3] [8] போட்டி அமைப்புகளின் படைப்புகளை, குறிப்பாக பிரபாகரரின் மீமாஞ்சம் , இராமானுசரின் விசிட்டாத்துவைதம், கங்கேச உபாத்யாயா ,இரகுநாத சிரோமணி ஆகியோரின் நியாயம், வியாசதீர்த்தரின் தர்க தாண்டவம் போன்றப் படைப்புகளை இவர் தனது படைப்பான அபிநவ தர்க தாண்டவத்தில் மறுக்கிறார். [3] இந்தியவியலாளர் பி.என்.கே.சர்மா "பொருண்மை வாதத்திற்கான போட்டியை மறுப்பதற்கான இவரது ஆற்றலும் உறுதியும் இவரது சில படைப்புகளின் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் கூட பிரதிபலிக்கிறது, அவற்றில் நான்கு" கோடாரி" என்ற பெயரில் செல்கின்றன." என்று எழுதுகிறார். [3] அறிஞர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், இந்து மதத்தின் ஆறு வேதாந்தத்தை படித்தார். பின்னர். உத்தராதி மடத்தின் சத்யநிதி தீர்த்தரின் கீழ் துவைத தத்துவத்தைப் படித்து, இறுதியில் அவருக்குப் பின் மடத்தின் தலைவரானார். இவர் 12 படைப்புகளை இயற்றினார். இதில் மத்துவர், ஜெயதீர்த்தர் வியாசதீர்த்தர் ஆகியோரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகளும், சமகால பள்ளிகளின், குறிப்பாக அத்வைதத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் பல சுயாதீனமான கட்டுரைகளும், அதே நேரத்தில் துவைத சிந்தனையை விரிவாகக் கூறின. [9] இவரது இயங்கியல் திறன் மற்றும் தர்க்கரீதியான புத்திசாலித்தனம் பெரும்பாலும் வியாசதீர்த்தருடன் ஒப்பிடப்படுகிறது. வரலாற்று ஆதாரங்கள்சத்யநாத தீர்த்தரைப் பற்றிய தகவல்கள் பல குருபரம்பரையிலிருந்து பெறப்பட்டுள்ளன: சலரி சம்கர்சனாசார்யர் (சத்தியாபினவ தீர்த்தரின் சீடர்) எழுதிய சத்யநாதப்யுதாயா; சாகர ராமாச்சார்யாவின் கொங்கனப்யுதயா; எஸ்.கே. பத்ரிநாத் எழுதிய சிறீ சத்யநாத தீர்த்தரு (கன்னடத்தில் ஒரு சுயசரிதை). [10] ஆகியவை சுயசரிதை![]() பி.என்.கே சர்மா கூறுகிறார், [note 4] சத்யநாத தீர்த்தருக்கு முதலில் நரசிம்மச்சார்யர் என்று பெயரிடப்பட்டது. இவர் கர்நாடகாவின் வடக்கு பகுதியில் உள்ள பிஜாப்பூரில் 1648 இல் அவதானி அறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் கிருட்டிணாச்சார்யர், தாயின் பெயர் ருக்மிணி பாய் என்பதாகும். ஆனால் ஆசிரியர் எஸ்.கே.பத்ரிநாத் சத்யநாத தீர்த்தரின் சுயசரிதையில் சத்யநாத தீர்த்தரின் முன்னாள் பெயரை இரகுநாதாச்சார்யர் என்று எழுதிகிறார். [3] [3] உத்தராதி மடத்தின் தலைவராவதற்கு முன்பு, இவர் சந்நியாசத்தை மேற் கொண்ட பிறகு மூன்று பெயர்களால் அறியப்பட்டார். கிருட்டிணாத்வைபாயன தீர்த்தரால் (வேதவியாச தீர்த்தரின் சீடர்) வித்யாநாத தீர்த்தர் என்ற பெயருடன், ஒரு சாதாரண சந்நியாசியாக நியமித்தார். இரண்டாவது முறையாக வேதநிதி தீர்த்தரால் இரங்கநாத தீர்த்தர் என்றும், மூன்றாவது முறையாக சத்யநிதி தீர்த்தரால் சத்யநாத தீர்த்தர் எனவும் பெயரிடப்பட்டது. [3] 1660 ஆம் ஆண்டில் சத்யநாத தீர்த்தர் என்ற பெயருடன் இவர் உத்தராதி மடத்தின் பீடாதிபதியாக ஆனார். படைப்புகள்இவர் பன்னிரண்டு படைப்புகளை எழுதியுள்ளார். இதில் வாதங்கள், மத்துவர், ஜெயதீர்த்தர், வியாசதீர்த்தர், போன்றோரின் படைப்புகள் பற்றிய விளக்கங்கள், சுயாதீனமான படைப்புகள், ஒரு சில பாடல்கள் ஆகியவை உள்ளன. குறிப்பிடத்தக்க சில படைப்புகளைத் தவிர, பல அச்சிடப்படாமல் உள்ளன. கையெழுத்துப் பிரதிகள் வீரச்சோழபுரம், பெங்களூர், திருக்கோயிலூர் ஆகிய இடங்களிலுள்ள மடங்களில் பாதுகாக்கப்படுகின்றன. வியாசராஜரால் நிறைவேற்றப்பட்ட உதாரணத்தையும் தத்துவப் பணிகளையும் பின்பற்ற சத்யநாதர் விரும்பினார். [9] இவரது அபிநவாமிருதா என்பது ஜெயதீர்த்தரின் பிராமணர்களின் சடங்குகள் பற்றிய வர்ணனையாகும். பிராமணச் சடங்குகள் என்பது துவைத வேதாந்தத்தின் பார்வையில் பிரமாணங்களைப் பற்றி விவாதிக்கும் ஒரு அறிவியல்பூர்வமான படைப்பாகும். அறிவார்ந்த செல்வாக்குசத்தியநாத தீர்த்தர் வியாசதீர்த்தர், ஜெயதீர்த்தர், பத்மநாப தீர்த்தர், மத்துவர் போன்றவர்களிடமிருந்து கணிசமாக தாக்கத்தை பெற்றார். அதில் இவர் அவர்களின் நடையிலிருந்தும், விசாரணை முறையிலிருந்தும் கடன் வாங்கினார். [9][12] இவர் தனது வாரிசுகள் மீதும் கணிசமான செல்வாக்கை செலுத்தினார். சத்யாதியான தீர்த்தரின் சந்திரிக மந்தனாவிலிருந்து சில அம்சங்களை அபிநவ சந்திரிகாவிலிருந்து பெற்றார். சத்யாபினவ தீர்த்தரின் துர்கதா பாவாதீபம், மத்துவரின் பாகவத தாத்பார்ய நிர்ணயம் பற்றிய முழுமையான வர்ணனை, அதன் சில அம்சங்களை சத்யநாத தீர்த்தரின் சாயலில் இருந்து கடன் வாங்குகிறது.[10] குறிப்புகள்
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia