செம்பூர்ணா மக்களவைத் தொகுதி
செம்பூர்ணா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Semporna; ஆங்கிலம்: Semporna Federal Constituency; சீனம்: 仙本那联邦选区) என்பது மலேசியா, சபா, தாவாவ் பிரிவு; செம்பூர்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P189) ஆகும்.[5] செம்பூர்ணா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து செம்பூர்ணா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] செம்பூர்ணா மாவட்டம்செம்பூர்ணா மாவட்டம் என்பது சபா மாநிலம், தாவாவ் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் செம்பூர்ணா நகரம். கோத்தா கினபாலு மாநகரத்தில் இருந்து சுமார் 531 கி.மீ. (330 மைல்) தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மலேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி செம்பூர்ணா மாவட்டத்தில் 166,587 மக்கள் வசிக்கின்றனர். 19-ஆம் நூற்றாண்டில் பிலிப்பீன்சு நாட்டை ஆட்சி செய்த எசுப்பானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் செம்பூர்ணா மாவட்டம் இருந்ததால், இங்கு இன்னும் சபகானோ எனும் எசுப்பானிய மொழி பேசப்படுகிறது. இந்த மாவட்டம் 1887 மே 10-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக நிறுவப் பட்டது. இந்த இடத்தின் பெயர் முதலில் தோங் ராலுன் (Tong Talun) என்று இருந்தது. பின்னரே செம்பூர்ணா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. செம்பூர்ணா என்றால் பஜாவு மொழியில் ஓய்வுக்கான இடம் என்று பொருள்.[7] செம்பூர்ணா மக்களவைத் தொகுதிசெம்பூர்ணா தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8] சபா பூமிபுத்ரா (63.6%) மலாயர் (32.3%) சீனர் (1.6%) இதர இனத்தவர் (2.6%)
செம்பூர்ணா தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.77%) பெண் (50.23%)
செம்பூர்ணா தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (9.1%) 21-29 (26.01%) 30-39 (22.58%) 40-49 (16.69%) 50-59 (12.24%) 60-69 (7.9%) 70-79 (2.59%) 80-89 (1.58%) + 90 (1.32%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia