சியாங்ஜா மாவட்டம்![]() ![]() சியாங்ஜா மாவட்டம் (Syangja District) (நேபாளி: स्याङ्जा जिल्लाⓘ) தெற்காசியாவில் நேபாளத்தின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 4-இல் அமைந்துள்ளது. நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் சியாங்ஜா மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சியாங்ஜா பஜார் ஆகும். கண்டகி மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டம் 1,164 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மக்கள் தொகையியல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சியாங்ஜா மாவட்ட மக்கள் தொகை 2,89,148 ஆகும். [1] இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவர்கள் 86.07% ஆகவும், இசுலாமியர்கள் 0.58% ஆகவும், பௌத்தர்கள் 12.47% ஆகவும், கிறித்தவர்கள் 0.07% ஆகவும், மற்ற சமயத்தவர்கள் 0.08% ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் அந்தணர், சத்திரியர், குரூங், மகர் மற்றும் பிற இனத்தவர்கள் வாழ்கின்றனர். குரூங் மற்றும் மகர் இன மக்கள் பிரித்தானிய இந்தியப் பேரரசின் போர்ப் படைகளில் ஒன்றான கூர்க்கா படையணியில் பணிபுரிந்தனர். தற்போதும் இந்திய இரானுவத்தில் இம்மக்கள் பணிபுரிகின்றனர். சாலை வசதிகள்மேற்கு நேபாள பிராந்தியத்தின் முக்கிய நகரங்களான பொக்காரா மற்றும் பைரவா நகரங்களுடன் சியாங்ஜா பஜார் நகரம், சித்தார்த்தா நெடுஞ்சாலை வழியாக இணைக்கிறது. நீர் மின் உற்பத்திஇம்மாவட்டத்தில் பாயும் காளிகண்டகி ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி, 144 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புவியியல் மற்றும் தட்ப வெப்பம்இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 2,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம் என மூன்று காலநிலைகளில் காணப்படுகிறது. [2] மாவட்ட உள்ளாட்சி நிர்வாகம்![]() இம்மாவட்டம் புத்தலி பஜார் நகராட்சி, வாலிங் நகராட்சி, சாப்பாகோட் நகராட்சி மற்றும் பீர்கோட் நகராட்சி என நான்கு நகராட்சி மன்றங்களையும், அறுபது கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது. [3] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia