சுமி மாகாணம்
சுமி மாகாணம் (Sumy Oblast) உக்ரைன் நாட்டின் வடகிழக்கில் உருசியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த மாகாணம். இதன் தலைநகரம் சுமி நகரம் ஆகும். 2021-இல் இதன் மக்கள் தொகை 10,53,402 ஆகும். இதன் பிற முக்கிய நகரங்கள் கோனோடாப், ஒக்டிர்கா, ரோம்னி, சோஸ்தகா ஆகும். இம்மாகாணத்தின் 600 இடங்களில் தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. இது வேளாண் பயிர்களை உற்பத்தி செய்கிறது. 7 ஆறுகள் இம்மாகாணத்தில் பாய்கிறது. புவியியல்23,800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாகாணத்தில் வடகிழக்கிலும், கிழக்கிலும் உருசியா, தென்மேற்கில் போல்தாவா மாகாணம், தெற்கில் கார்கிவ் மாகாணம், மேற்கில் செர்னிகிவ் மாகாணம் உள்ளது. தேஸ்னா ஆறுடன் 7 ஆறுகள் இம்மாகாணத்தில் பாய்கிறது. மாகாண ஆட்சிப் பிரிவுகள்இம்மாகாணம் 18 மாவட்டங்களும், 15 நகரங்களும், 7 நகராட்சிகளும், 20 நகர்புற குடியிருப்புகளும், 1492 கிராமங்களும் கொண்டது. ![]() பொருளாதரம்இம்மாகாணத்தில் வேதியியல் தொழிற்சாலைகள், இயந்திரவியல் தொழிற்சாலைகள், வேளாண் இயந்திரக் கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், இரும்புச் சுரங்கங்கள் கொண்டது. இம்மாகாணம் 237 பெரிய அளவிலான தொழிற்சாலைகளும், 327 சிறிய அளவிலான தொழிற்சாலைகள் கொண்டுள்ளது. இம்மாகாணத்தின் முக்கிய விளைபொருட்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சூரியகாந்தி விதைகள், உருளைக்கிழங்கு ஆகும். மேலும் இறைச்சி, பால் பொருட்கள், முட்டை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia