சாகர்பாசியா மாகாணம்
சாகர்பாசியா மாகாணம் (Zakarpatska Oblast), உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைநகரம் உசரோத் நகரம் ஆகும். கார்பேத்திய மலைத்தொடரில் அமைந்த சாகர்பாசியா மாகாணம், போலந்து, அங்கேரி, உருமேனியா, சுலோவாக்கியா என 4 நாடுகளுடன் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இதன் கிழக்கில் உக்ரைனின் லிவீவ் மாகாணம் மற்றும் ஐவானோ பிராங்கிவ்ஸ்க் மாகாணங்களுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. 13,000 சதுர கிலோமீட்டர்கள் (5,000 sq mi) பரப்பளவு கொண்ட சாகர்பாசியா மாகாணம், உக்ரைன் நாட்டின் பரப்பளவில் 23-வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் 15-வது இடத்தில் உள்ளது. 2001-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,54,614 ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,60,129 ஆகும். புவியியல்கார்பேத்திய மலைத்தொடரின் தென்மேற்கில் 80% பகுதியில் சாகர்பாசியா மாகாணம் 12,800 km2 (4,942 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது.[4] சாகர்பாசியா மாகாணம், போலந்து, அங்கேரி, உருமேனியா, சுலோவாக்கியா என 4 நாடுகளுடன் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இம்மாகாணத்தில் திசா ஆறு, போர்சவா ஆறு மற்றும் டெரிபிலியா ஆறுகள் பாய்கிறது..[5]இம்மாகாணத்தின் துர்குல் மலையின் சரிவில், 1,750 மீட்டர்கள் (5,740 அடி) உயரத்தில், 3,000 சதுர மீட்டர்கள் (32,000 sq ft) பரப்பளவில் நன்னீர் ஏரி உள்ளது. இதன் கோடைக்கால சராசரி வெப்பம் +21 °С (70 °F) மற்றும் குளிர்கால வெப்பம் −4 °С (25 °F) ஆக உள்ளது.
மாகாண ஆட்சிப் பிரிவுகள்![]() ![]() சாகர்பாசியா மாகாணத்தில் 13 மாவட்டங்கள் இருந்தது. 18 சூலை 2020 அன்று இதனை 6 மாவட்டங்களாக குறைக்கப்பட்டது.[6][7]இம்மாகாணம் 11 நகரங்கள், 579 கிராமங்கள் கொண்டது. மக்கள் தொகை பரம்பல்![]() உக்ரேனியர்கள் அங்கேரியர்கள் உருமேனியர்கள் உக்ரைன்&உருசிய கலப்பினத்தவர்கள் 2016-ஆம் ஆண்டில் இம்மாகாணத்தின் மக்கள் தொகை 12,59,158 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 80.50% ஆகவுள்ளனர்.[8] அங்கேரி மொழி பேசுபவர்கள் 12.1%, உருமோனிய மொழி பேசுபவர்கள் 2.6%, உருசிய மொழி பேசுபவர்க்ள் 2.5%, சுலோக்கிய மொழி பேசுபவர்கள் 1.1% மற்றும் பிற மொழிகள் பேசுபவர்கள் 08% ஆக உள்ளனர். இதனையும் காண்கபடக்காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia