செர்கசி நகரம் (Cherkasy) உக்ரைன் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்த செர்கசி மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது தினேப்பர் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை சுமார் 2,72,651 ஆகும். இது நாட்டின் தலைநகரான கீவ் நகரத்திற்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செர்கசி நகரம் 2 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1 அக்டோபர் 2015 அன்றைய மதிப்பீட்டின்படி, செர்கசி நகரத்தின் மக்கள் தொகை 2,84,479 ஆகும்.[3]செர்கசி நகரத்தின் பெரும்பான்மையோர் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் ஆவார். அதற்கு அடுத்து உருசிய மொழி பேசுபவர்கள் மற்றும் யூதர்கள் ஆவார். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 46.4% மற்றும் பெண்கள் 53.6% ஆகவுள்ளனர்.[4]இதன் மக்கள் தொகையில் 14 வயதிற்குட்பட்டோர் 15% ஆக உள்ளனர். ஓய்வுதியர்கள் 19% ஆக உள்ளனர்.
பொருளாதாரம்
செர்கசி நகரத்தில் வேதியியல், கார் தொழிற்சாலைகள், உணவுப்பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.