செர்கசி மாகாணம்
செர்கசி மாகாணம் (Cherkasy Oblast) உக்ரைன் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செர்கசி நகரம் தினேப்பர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 20900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாகணத்தின் 2021ம் ஆண்டின் மக்கள் தொகை 11,78,266 ஆகும். புவியியல்இம்மாகாணத்தின் நடுவில் பாயும் தினேப்பர் ஆறு இரண்டு பெரும் சமமற்ற பகுதிகளாக பிரிக்கிறது. மேற்கில் பெரும் பகுதியை கொண்ட இம்மாகாணப்பகுதி மேட்டு நிலமாகவும், சிறிய கிழக்குப் பகுதி தாழ் நிலப்பகுதியாகவும் உள்ளது. கிழக்குப் பகுதி தினேப்பர் ஆற்று வெள்ள நீரால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே தினேப்பர் ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டுள்ளது. செர்கசி மாகாணம் தென்மேற்கிலிருந்து, வடகிழக்காக 245 கிலோ மீட்டர் நீளமும்; வடக்கிலிருந்து தெற்காக 150 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதன் வடக்கில் கீவ் மாகாணம், தெற்கில் கிரோவோக்ராட் மாகாணம், கிழக்கில் போல்தாவா மாகாணம் மற்றும் மேற்கில் வின்னித்சியா மாகாணம் எல்லைகளாக உள்ளது. மாகாண ஆட்சிப் பிரிவுகள்![]() சூலை 2020ஆம் ஆண்டு முதல் செர்கசி மாகாணத்தின் ஆட்சிப் பிரிவுகலை 4 மாவட்டங்களாகவும், 16 நகரங்களாகவும், 15 நகரபுற குடியிருப்பு பகுதிகளாகவும், 824 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பரம்பல்2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, செர்கசி மாகாணத்தின் மக்கள் தொகை 13,35,064 ஆகும். இம்மாகாணத்தின் மக்கள் தொகையில் 53.7% நகர்புறங்களிலும், 46.3% கிராமப்புறங்களிலும் வாழ்கின்றனர்.[3] இம்மாகாணத்தில் உக்ரைனியர்கள் 93.6% வாழ்கின்றனர்.[4] உருசிய மொழி பேசுபவர்கள் 5.4% ஆக உள்ளனர். பொருளாதாரம்இம்மாகாணத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். கோதுமை, சர்க்கரை வள்ளி கிழங்கு, பார்லி, சோளம், புகையிலை மற்றும் சணல் முக்கிய பயிர்கள் ஆகும். கால்நடைப் பண்ணைகள் அதிகம் உள்ளது. செர்கசி நகரத்தில் வேதியியல் தொழிற்சாலைகள், வேளாண்மைப் பொருட்கள் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. கல்வி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia