கீவ் மாகாணம்
கீவ் மாகாணம் (Kyiv Oblast or Kiev Oblast) உக்ரைன் நாட்டின் நடு வடக்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன தலைநகரம் கீவ் நகரம் ஆகும். உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரத்தை கைப்பற்ற, 24 பிப்ரவரி 2022 முதல் உருசியா படையெடுப்பு நடத்தி வருகிறது. புவியியல்28,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கீவ் மாகாணம், உக்ரைன் நாட்டில் வடமத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது கீவ் நகரத்தின் பரப்பளவை விட 35 மடங்குப் பெரிய்தாகும். கீவ் மாகாணத்தின் வடக்கில் பெலரஸ் நாடும், தென்கிழக்கில் போல்தவா மாகாணம், தெற்கில் செர்கசி மாகாணம், கிழக்கிலும், வடகிழக்கிலும் செர்னிகிவ் மாகாணம், தென்மேற்கில் வின்னித்சியா மாகாணம், மேற்கில் சைதோமிர் மாகாணம் எல்லைகளாக உள்ளது. தினேப்பர் ஆறு கீவ் மாகாணத்தின் வடக்கிலிருந்து தெற்காக 246 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்கிறது. கீவ் நீர்த்தேக்கம் மற்று கனிவ் நீர்த்தேக்கம் மற்றும் 750 சிறுஏரிகள் கீவ் மாகாணத்தின் நீர் ஆதாரமாக உள்ளது. தட்ப வெப்பம்சனவரி மாதத்தில் குளிர்காலத்திய வெப்ப நிலை {convert|-6.1|°C|°F}} ஆகவும், கோடைக்காலத்திய வெப்ப நிலை 19.2 °C (66.6 °F) ஆகவும் இருக்கும். நிர்வாகப் பிரிவுகள்கீவ் மாகாணம் 25 மாவட்டங்கள், 26 நகரங்கள், 12 மண்டல நகரங்கள், 12 சிறு நகரங்கள் மற்றும் 1,127 கிராமங்கள் கொண்டது. செர்னோபில் மண்டலம்கீவ் மாகாணத்தின் வடமேற்கின் கோடியில் அமைந்த செர்னோபில் நகரத்தில் உள்ள அணு உலை 26 ஏப்ரல் 1986 அன்று வெடித்து அணுக்கதிரியக்கம் வெளியே பரவியதால் செர்னோபில் மண்டலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டது. தற்போது இந்நகரம் மனிதர் வாழாது உள்ளது. மக்கள் தொகை பரம்பல்கீவ் மாகாணத்தின் மொத்த் மக்கள் தொகை 17,88,530 ஆகும். அதில் உக்குரேனிய மொழி|உக்ரேனியர்கள்]] 16,84,800 (92.5%) பெரும்பான்மையாகவும், உருசியர்கள், யூதர்கள், பெல்ரசியர்கள் மற்றும் பிறர் சிறுபான்மையினத்தவராக உள்ளனர். கீவ் போன்ற நகர்புறங்களில் 10,53,500 (57.6%) மக்களும், கிராமபுறங்களில் 7,74,400 (42.4%) மக்களும் வாழ்கின்றனர்..[6]கீவ் மாகாண மக்கள் தொகையில் ஆண்கள் 46.3% மற்றும் பெண்கள் 53.7% ஆக உள்ளனர். பொருளாதாரம்தொழில்துறைகீவ் மாகாணம் அணுசக்தி மின் ஆற்றல், எரிசக்தி துறை, உணவு, வேதியியல், பெட்ரோ-கெமிக்கல் தொழில்கள், பொறியியல் இயந்திரங்கள், உலோகத் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. வேளாண்மை1999-ஆம் ஆண்டின் கீவ் மாகாணத்தின் தானிய உற்பத்தி 1,118,600 டன்கள் ஆகும். கரும்பு 15,70,900 டன்களும், சூரியகாந்தி வித்துக்கள் 1,81,000 டன்களும் விளைந்தது. அடிக்குறிப்புகள்a. ^ These neighboring settlements are practically merged into a conurbation மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்கீவ் மாகாணம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
|
Portal di Ensiklopedia Dunia