புச்சா (Bucha) (உக்ரைனியன்: Бучаஉக்ரைன் நாட்டின் கீவ் மாகாணத்தின் புச்சா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். 2021-இல் புச்சா நகரத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 36,971 ஆகும்.
2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, உருசியப் படைகள் புச்சா நகரத்தில் உள்ள உக்ரைன் இராணுவ நிலைகள் மற்றும் முக்கிய கட்டிடங்கள் மீது குண்டுகள் வீசித்தாக்கி அழித்தனர்.[1]பின்னர் 12 மார்ச் 2022 அன்று உருசியாவின் படைகள் புச்சா நகரத்தை கைப்பற்றினர். 31 மார்ச் 2022 அன்று மீண்டும் உக்ரைனியப் படைகள் உருசியப் படைகளிடமிருந்து புச்சா நகரை மீட்டனர்.
[2]
புச்சா படுகொலை
2 ஏப்ரல் 2022 அன்று புச்சா நகர வீதிகளில், உருசியப் படைகளால் கொல்லப்பட்ட, உக்ரைனிய பொதுமக்களின் சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. இப்படுகொலைகள் குறித்து செய்தி அறிக்கைகள் மற்றும் காணொளிகள் வெளியானது. [3] முதல் தகவல் அறிக்கையின்படி, 280 சடலங்கள் புச்சா நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது. [4][5]