செர்னிவ்சி மாகாணம்
செர்னிவ்சி மாகாணம், உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்த சிறு மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் செர்னிவ்சி நகரம் ஆகும். இம்மாகாணத்தின் தெற்கில் உருமேனியா மற்றும் மல்தோவா நாடுகளுடன் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இம்மாகாணம் கார்பேத்திய மலைகள், காடுகள், சமவெளிகள் கொண்டது. தினிஸ்டர் ஆறு இம்மாகாணத்தில் பாய்கிறது. 2020-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 8,96,566 ஆகும். புவியியல்8,097 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செர்னிவ்சி மாகாணம், உக்ரைன் நாட்டின் பரப்பளவில் 1.3% கொண்ட மிகச்சிறிய மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாயும் 75 ஆறுகள் உள்ளது. இம்மாகாணத்தின் பெரிய ஆறு தினிஸ்டர் ஆறு 290 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.[5] இம்மாகாணம் 3 வகையான புவியியல் அமைப்புகளை கொண்டது. புல்வெளி காடுகள், கார்பேத்திய மலைகள் மற்றும் காடுகள் ஆகும். அமைவிடம்உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்த செர்னிவ்சி மாகாணத்தின் தெற்கில் உருமேனியா மற்றும் மல்தோவா நாடுகளும், பிற திசைகளில் இவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம், * தெர்னோப்பில் மாகாணம், கெமெள்னிட்சிகி மாகாணம் மற்றும் வின்னித்சியா மாகாணம் எல்லைகளாக உள்ளது. இம்மாகாணம் உருமேனியாவுடன் 226 கிலோ மீட்டர் நீளத்திற்கும், மல்தோவாவுடன் 198 கிலோ மீட்டர் நீளத்திற்கும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மாகாண ஆட்சிப் பிரிவுகள்![]() சூலை 2020 முதல் இம்மாகாணம் 3 மாவட்டங்கள், 11 நகரங்கள், 8 நகர்புற குடியிருப்புகள் மற்றும் 252 கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பரம்பல்![]() 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[6] இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 75% (689.1 ஆயிரம்), உருமேனியா மொழி பேசுபவர்கள் 12.5% (114.6 ஆயிரம்), மல்தோவா 7.3% (67.2 ஆயிரம்) மற்றும் உருசிய மொழி பேசுபவர்கள் 4.1% (37.9 ஆயிரம்) உள்ளனர். மேலும் பெலருசியா, யூத மொழிகள் பேசுபவர்கள் 1.2% ஆக உள்ளனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia