லிவீவ் மாகாணம்
லிவீவ் மாகாணம் (Lviv Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கு கோடியில், போலந்து நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் லிவீவ் நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 24,97,750 ஆகும். புவியியல்கார்பேத்திய மலைகள் இம்மாகாணத்தின் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காக அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் வடக்கிலிருந்து தினிஸ்டர் ஆறு மற்றும் சான் ஆறுகள் பாய்கிறது. இம்மாகாணத்தில் பைன் மரக்காடுகளும், நிலக்கரிச் சரங்கங்கள் அதிகம் உள்ளது. தட்ப வெப்பம்இம்மாகாணத்தின் கார்பேத்திய மலைப்பகுதிகளில் சனவரி மாதத்தில் சராசர் வெப்பம் −7 °C (19 °F) முதல் −3 °C (27 °F) வரை இருக்கும். சூலை மாதத்தில் சராசரி வெப்பம தினிஸ்டர் மற்றும் சான் ஆற்றுச் சமவெளிகளில் 14–15 °C (57–59 °F) வரையும், கார்பேத்திய மலைப்பகுதிகளில் 16–17 °C (61–63 °F) வரையும் இருக்கும். ![]() மாகாண ஆட்சிப் பிரிவுகள்லிவீவ் மாகாணம் 20 மாவட்டங்கள், 44 நகரங்கள், 34 நகர்புற குடியிருப்பு பகுதிகள், 1849 கிராமங்கள் கொண்டது. மக்கள் தொகை பரம்பல்இம்மாகாணத்தில் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 94.8%, உருசிய மொழி பேசுபவர்கள் 3.6% உள்ளனர்.[3] இம்மாகாணத்தில் முதலிடத்தில் 59% பேர் உக்ரைனிய கிரேக்க கத்தோலிக்க சமயத்தினராக உள்ளனர். இரண்டாவதாக உக்ரைனிய தன்னாட்சி மரபுவழி திருச்சபையினர் உள்ளனர். ரோமன் கத்தோலிக்கர்கள், உக்ரைனிய மரபுவழி திருச்சபையினர் சிறுபான்மையாக உள்ளனர்.
படக்காட்சிகள்இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia