தெர்னோப்பில் மாகாணம்
தெர்னோப்பில் மாகாணம் (Ternopil Oblast) உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் தெர்னோப்பில் நகரம் ஆகும். 2021-இல் இதன் மக்கள் தொகை 10,30,562 ஆகும். இம்மாகாணத்தில் 34 கோட்டைகள் உள்ளது. இம்மாகாணத்தின் ஊடாக தினிஸ்டர் பள்ளத்தாக்கு செல்கிறது. புவியியல்மேற்கு உக்ரைனில் மலைப்பாறைகள் கொண்ட மேட்டு நிலத்தில் அமைந்த தெர்னோப்பில் மாகாணத்தின் பரப்பளவு 13,800 சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாகாணத்தில் இயறகையில் அமைந்த நூற்றுக்கும் மேற்பட்ட குகைகள் கொண்டுள்ளது.[3]இம்மாகாணத்தின் தலைநகரான தெர்னோப்பில் நகரத்தில் தினிஸ்டர் ஆறு பாய்கிறது. இதன் தெற்கில் செர்னிவ்சி மாகாணம், தென்மேற்கில் ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணம், வடமேற்கில் லிவீவ் மாகாணம், வடக்கில் ரைவன் மாகாணம் மற்றும் கிழக்கில் கமெல்னிட்ஸ்கி மாகாணம் அமைந்துள்ளது. மக்கள் தொகை பரம்பல்இம்மாகாணத்தின் 98% மக்கள் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் ஆவார். உருசிய மொழி பேசுபவர்கள் 1.6% ஆக உள்ளனர். 2020-இல் இதன் மக்கள் தொகை 10,38,694 ஆகும். பொருளாதாரம்இம்மாகாணத்தின் முக்கியப் பொருளாதாரம் வேளாண்மைப் பயிர்களிலிருந்து கிடைக்கிறது. கரும்பு, மதுபானங்கள், பால்பொருட்கள் தொடர்பான ஆலைகள் இம்மாகாணத்தில் அதிகம் உள்ளது. மாகாண ஆட்சிப் பிரிவுகள்18 சூலை 2020க்குப் பிறகு இம்மாகாணம் 3 மாவட்டங்கள், 14 நகரங்கள், 17 நகரபுற குடியிருப்புகள், 1019 கிராமங்கள் கொண்டுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia