செர்னிகிவ் மாகாணம்
செர்னிகிவ் மாகாணம் (Chernihiv Oblast) உக்ரைன் நாட்டின் நடு வடக்கில், உருசியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் செர்னிகிவ் நகரம் ஆகும். புவியியல்31,900 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செர்னிகிவ் மாகாணத்தின் கிழக்கில் கீவ் மாகாணம், கிழக்கில் சுமி மாகாணம், தெற்கில் போல்தாவா மாகாணம், வடமேற்கில் பெலரஸ் நாடும், வடகிழக்கில் உருசியாவும் எல்லைகளாகக் கொண்டது. நிர்வாகப் பிரிவுகள்![]() சூலை 2020ஆம் ஆண்டு முதல் செர்னிகிவ் மாகாணம் 5 மாவட்டங்கள், 3 பெரிய நகரங்கள் , 41 சிறிய நகரங்கள் , 34 பேரூராட்சிகள் மற்றும் 1494 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பரம்பல்2015-ஆம் ஆண்டின் மககள் தொகை கணக்கெடுப்பின்படி, செர்னிகிவ் மாகாணத்தின் மக்கள் தொகை 10,55,673 ஆகும். இதன் மக்களில் பெரும்பான்மையாக உக்ரேனியர்களும், சிறுபான்மையாக பெலரசியர்கள் மற்றும் உருசியர்கள் உள்ளனர். கிழக்கு மரபுவழி திருச்சபையினர் பெரும்பான்மையாகவும், கத்தோலிக்கர்கள், சீர்திருதத சபையினர் மற்றும் நாத்திகர்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். பொருளாதாரம்இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் இம்மாகாணத்தின் இயற்கை வளம் ஆகும். அத்துடன் மின்னணு இயந்திரங்கள், பொறியியல் இயந்திரங்கள், புகையிலை பொருட்கள், ஜவுளித் தொழில்கள், பீர் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்செர்னிகிவ் மாகாணம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
|
Portal di Ensiklopedia Dunia