மைக்கோலைவ் மாநிலம்
மைக்கோலைவ் மாகாணம் (Mykolaiv Oblast), உக்ரைன் நாட்டின் மாகாணங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைநகரம் மைக்கோலைவ் நகரம் ஆகும். 24,598 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மைக்கோலைவ் மாகாணத்தின் 2021-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 11,08,394 ஆகும். 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, மைக்கோலைவ் மாகாணத்தை உருசியப் படைகளால் கைப்பற்ற முடியாது திரும்பியது. அமைவிடம்மைக்கோலைவ் மாகாணத்தின் மேற்கிலும், தென்மேற்கிலும் ஒடேசா மாகாணமும், வடக்கில் கிரோவோக்ராட் மாகாணமும், வடகிழக்கில் நிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணமும், தென்கிழக்கில் கெர்சன் மாகாணமும், தெற்கில் கருங்கடல் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மக்கள் தொகை பரம்பல்2005-ஆம் ஆண்டில் மைக்கோலைவ் மாகாணத்தின் மக்கள் தொகை 1.2 மில்லியன் ஆக இருந்தது. இதன் 66% மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர். 60% மக்கள் இம்மாகாணத்தின் தலைநகரமும், தொழில் துறை நகரமான மைக்கோலைவ் நகரத்தில் வாழ்கின்றனர். 3,47,116 (31.3%) மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாகாணத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 45 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாகாணத்தில் உக்ரைனிய மக்கள் 81.9% ஆக உள்ளனர். மாகாணப் பிரிவுகள்மைக்கோலைவ் மாகாணம் 19 மாவட்டங்களாகளாகவும், 4 நகராட்சிகளாகவும், 820 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்ட்டுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia