செனான் நைட்ரேட்டுசெனான் நைட்ரேட்டு (Xenon nitrate) என்பது (Xe(NO3) தயாரிப்புசெனான் நைட்ரேட்டு பல உற்பத்தி முயற்சிகள் கீழ்கண்ட முறையில் அமைகின்றன:[1] XeF2 + 2HNO3 → Xe(NO3)2 + 2HF[2][3] இவ்வேதி வினையில் செம்பழுப்பு நிறத்தில் உருவாகும் திண்மம் 23 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையும்போது தற்காலிகமாக நீல நிறமாக மாறுகிறது.[2] இருந்தபோதிலும் இது விரைவாக சிதைவடைகிறது.: Xe(NO3)2 → Xe + O2NOONO2 (நிலைத்தன்மையற்ற ஒரு நைட்ரசன் பெராக்சைடு) என்றாலும் ஒரு கலப்பு நைட்ரேட்டு கண்டிப்பாக இங்கு உள்ளது, FXeONO2.[1]. புளோரோசெனோனியம் நைட்ரேட்டு என்ற பெயராலும் [4] செனான் புளோரைடு நைட்ரேட்டு.[5] என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன. கீழ்கண்ட வினை வழியாக இவை உருவாகின்றன :[1] [FXeOXeFXeF][AsF6] + 2NO2F → FXeONO2 +NO2AsF6. FXeONO2 சேர்மத்தை தூய்மையாக்க இதை SO2ClF இல் கரைக்க வேண்டும். நைட்ரோனியம் ஆர்சனிக் எக்சாபுளோரைடு திண்மமாக வீழ்படிவாகிறது.[1] செனான் டைபுளோரைடு சேர்மத்தை நீர்ம டைநைட்ரசன் டெட்ராக்சைடு கரைசலில் கரைத்து FXeONO2 சேர்மத்தை மாற்று தயாரிப்பு முறையில் தயாரிக்கலாம். இம்முறையில் குறைவான அளவிலேயே விளைபொருள் உருவாகிறது [1] XeF2 + NO+ + NO3− → FXeONO2 + NOF at 0 °C இத்தயாரிப்பு முறை ஒரு திறனற்ற தயாரிப்பு முறையாகக் கருதப்படுகிறது. ஏனெனில் நீர்மத்தில் போதுமான அளவுக்கு நைட்ரேட்டு அயனி இருப்பதில்லை. மேலும் செனான் நைட்ரேட்டு சிதைவடைந்து மறைகிறது.[1] XeF2 + HNO3 → FXeNO3 + HF மேற்கண்ட தயாரிப்பு முறையிலும் இச்சேர்மம் தயாரிக்கப் படுகிறது:[1]. பண்புகள்புளோரோசெனோனியம் நைட்ரேட்டு வெண்மை நிறங்கொண்ட ஒரு படிகப்பொருளாகும். ஒற்றை சரிவச்சு கட்டமைப்பில் உள்ள இச்சேர்மத்தின் படிகங்கள் P21/c என்ற இடக்குழுவை ஏற்றுள்ளன. அலகுக்கூட்டில் நான்கு மூலக்கூறுகள் 386.6 Å3 என்ற ஒட்டுமொத்த கன அளவில் காணப்படுகின்றன. a=4.6663, b=8.799 Å c=9.415 Å மற்றும் செங்குத்துக் கோடல்லாத கோண அளவுகள் β=90.325° , α மற்றும் γ = 90° என்பவை இதன் கள அளவுகளாகும்[1]. படிகத்தின் அடர்த்தி அளவு 3.648 என்றும் மூலக்கூற்று எடை அளவு 212.3 எனவும் -173 பாகை செல்சியசு வெப்பநிலையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகள் தெரிவிக்கின்றன[1]. செனான் மற்றும் புளோரின் அணுக்களுக்கிடையில் 1.992 Å பிணைப்பு இடைவெளியும், செனான் மற்றும் ஆக்சிசன் அணுக்களுக்கிடையில் 2.126 Å பிணைப்பு இடைவெளியும், ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் அணுக்களுக்கிடையில் 1.36 Å பிணைப்பு இடைவெளியும், மற்ற நைட்ரேட்டு ஆக்சிசன் பிணைப்புகள் 1.199 (ஒருபக்கம்) மற்றும் 1.224 Å (மறுபக்கம்) அளவுகளையும் கொண்ட மூலக்கூறுகளாக உள்ளன[1]. FXeO 177.6°, XeON 114.7°, (Xe)ONO 114.5° (ஒருபக்கம்), மற்றவை (Xe)ONO 118.4° (மறுபக்கம்) மற்றும் (Xe-அல்லாத)ONO அளவு 127.1° என்பவை பிணைப்புக் கோண அளவுகளாகும்[1]. செனான் அணுவின் மீதுள்ள பிணைப்பு நீளங்களும் கோணங்களும் FXeOSO2F மற்றும் FXeOTeF5 சேர்மங்களில் காணப்படுவதைப் போலவே உள்ளன. முனைவு ஆக்சிசன் பிணைப்பின் இருப்பை இந்த அளவுகள் உணர்த்துகின்றன. செனான்-ஆக்சிசன்–நைட்ரசன் பிணைப்பு கோணம் ஆலசன் நைட்ரேட்டுகளின் கோணங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. இவ்வேறுபாடு செனான் ஆக்சிசன் பிணைப்பின் குறைந்த பிணைப்பு அடர்த்தியை வெளிப்படுத்துகின்றன. N-O ஒருபக்க பிணைப்பு நீளம் மற்ற ஆலசன் நைட்ரேட்டுக்கு எதிரான N-O மறுபக்க பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிக நீளம் கொண்டதாக உள்ளது[1]. FXeONO2 சேர்மம் நிலைப்புத்தன்மை அற்றதல்ல. -78 பாகை செல்சியசு வெப்பநிலையில் மெதுவாக இது XeF2.N2O4 ஆக உடைகிறது. இச்சிதைவு பல நாட்கள் அளவில் நிகழ்கிறது[1]. 0 °பாகை செல்சியசு வெப்பநிலையில் FXeONO2 ஏழுமணி நேரம் என்ற அரை ஆயுட்கால அளவில் சிதைந்து XeF2 என்று மாறுகிறது[1]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia