டெட்ராநைட்ரேடோபோரேட்டுடெட்ராநைட்ரேடோபோரேட்டு (Tetranitratoborate) என்பது நான்கு நைட்ரேட்டு தொகுதிகள் போரானுடன் சேர்ந்து உருவாகும் எதிர்மின் அயனியாகும். இந்த அயனியின் வாய்ப்பாடு [B(NO3)4]−ஆகும். டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேடோபோரேட்டு[1] அல்லது டெட்ராயெத்தில் அமோனியம்டெட்ராநைட்ரேடோபோரேட்டு[2] போன்ற பெரிய நேர்மின் அயனிகளுடன் சேர்ந்து இவை உப்புகளை உருவாக்குகின்றன. சி.ஆர்.குல்பெர்ட்டும் எம்.டி.மார்சலும் 1966 ஆம் ஆண்டில் போரான் நைட்ரேட்டு தயாரிக்க முயன்று தோல்வியடைந்த பின்னர் இந்த அயனியைக் கண்டறிந்தனர்.[1]. டெட்ராநைட்ரேடோபோரேட்டு அயனியுடன் தொடர்புடைய போரான் நைட்ரேட்டு இதன் உருவாக்கத்தை தடை செய்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் -78 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது[2] நைட்ரேட்டுக்குப் பதிலாக பெர்குளோரேட்டு தொகுதிகளைக் கொண்ட தொடர்புடைய மற்ற அயனிகள் சற்று அதிக நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. போரானுக்குப் பதிலாக அலுமினியம் கொண்டுள்ள டெட்ராநைட்ரேடோ அலுமினேட்டும் [3] இதேபோல சற்று அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன. உருவாக்கம்டெட்ராமெத்தில் அமோனியம் குளோரைடு BCl3 உடன் வினைபுரிந்து (CH3)4NBCl4 சேர்மத்தை உருவாக்குகிறது. பின்னர் டெட்ராகுளோரோபோரேட்டு -20° செல்சியசு வெப்பநிலையில் N2O4 உடன் வினைபுரிந்து டெட்ராமெத்தில் அமோனியம்நைட்ரேட்டோபோரேட்டும் NO2Cl மற்றும் Cl2.போன்ற வாயுக்களும் உற்பத்தியாகின்றன [2]. 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் குளோரோஃபார்மில் உள்ள BCl3 உடன் ஒரு உலோக நைட்ரேட்டு பலநாட்களுக்கு வினைபுரிந்து குளோரோநைட்ரேட்டோபோரேட்டு [Cl3BNO3]− என்ற ஒரு நிலைத்தன்மையற்ற இடைநிலைப்பொருள் உருவாகிறது.
பண்புகள்டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோ போரேட்டின் அகச்சிவப்பு அலைமாலையில் 1612 செ.மீ−1 முக்கிய வரிகளில் அதிர்வுகளை வெளிப்படுத்தி v4 சமச்சீர்மையை இயல்பாக்குகிறது. இதேபோல 1297 , 1311 செ,மீ−1 வரிகளில் அதிர்வுகளை வெளிப்படுத்தி v1 சமச்சீர்மையை இயல்பாக்குகிறது. ஒரு ஆக்சிசன் வழியாக நைட்ரேட்டு பிணைந்திருப்பதாலேயே இந்த அதிர்வுகள் உண்டாகின்றன[1]. டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோபோரேட்டின் அடர்த்தி 1.555 ஆகும். நிறமற்ற படிகத்தன்மையுடன் இது காணப்படுகிறது. சூடுபடுத்தும் போது 51 °செ மற்றும் 62° வெப்பநிலையில் சிலவகையான நிலைமாற்றத்திற்கு உட்படுகிறது. 75 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது சிதைவடைந்து வாயுவாக மாறுகிறது. 112 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பத்தை உமிழ்கிறது[2] டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோபோரேட்டு குளிர் நீரில் கரையாமலும் சூடான நீரில் சிறிதளவும் கரைகிறது. நீருடன் இது வினைபுரிவதில்லை. திரவ அமோனியா, அசிட்டோ நைட்ரில், மெத்தனால், டைமெத்தில்பார்மமேட்டு போன்றவற்றில் கரைகிறது. கந்த டை ஆக்சைடுடன் வினைபுரிகிறது[1][5] அறை வெப்பநிலையில் டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோபோரேட்டு சில மாதங்களுக்கு நிலைத்தன்மையுடன் வெடிக்காமல் காணப்படுகிறது[1] கார உலோக டெட்ராநைட்ரேடோபோரேட்டுகள் அறைவெப்பநிலையில் சிதைவற்று நிலைப்புத்தன்மையற்று உள்ளன[4] 1-எத்தில்-3-மெத்தில்-இமிடசோலிமியம் டெட்ராநைட்ரேட்டோபோரேட்டு 2002 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. அயனித்திரவமான இது -25 ° செல்சியசில் திண்மமாக மாறுகிறது[6]. மேற்கோள்கள்
.
|
Portal di Ensiklopedia Dunia