குளோரின் நைட்ரேட்டு
குளோரின் நைட்ரேட்டு (Chlorine nitrate) என்பது ClNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். படைமண்டலத்தில் உள்ள முக்கியமான வளிமண்டல வாயுவாகும். ஓசோன் சுருங்குதலுக்கு காரணமாகும் முக்கியமான ஓர் குளோரின் சேர்மமாகவும் இது விளங்குகிறது. உலோகங்கள், உலோக குளோரைடுகள், ஆல்ககால்கள், ஈதர்கள் மற்றும் பெரும்பாலான கரிமச் சேர்மங்கள் ஆகியனவற்றுடன் வெடிக்கும் இயல்புடன் இச்சேர்மம் வினைபுரிகிறது. சிதைவடையும் வகையில் குளோரின் நைட்ரேட்டைச் சூடுபடுத்தும் போது குளோரின் நைட்ரசன் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களை வெளிவிடுகிறது. தயாரிப்புஇருகுளோரின் ஒராக்சைடுடன் இருநைட்ரசன் ஐந்தாக்சைடை 0°செல்சியசு வெப்பநிலையில் சேர்த்து வினைபுரியச் செய்யும் பொழுது குளோரின் நைட்ரேட்டு உருவாகிறது.
வினைகள்ஆல்க்கீன்களுடன் இச்சேர்மம் வினைபுரிகிறது.
குளோரின் நைட்ரேட்டு உலோக குளோரைடுகளுடன் வினைபுரிகிறது:[1].
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia