பெரிலியம் நைட்ரேட்டு
பெரிலியம் நைட்ரேட்டு (Beryllium nitrate) என்பது Be(NO3)2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் [1] கூடிய நைட்ரிக் அமிலத்தினுடைய அயனிச்சேர்மம் ஆகும். வாய்ப்பாட்டின் ஒவ்வொரு அலகும் Be2+ நேர்மின் அயனிகள் மற்றும் NO3− எதிர்மின் அயனிகள் என்ற இரண்டு அயனிகளாலும் ஆக்கப்பட்டுள்ளது. இச்சேர்மம் பெரிலியம் இருநைட்ரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. தயாரிப்புபெரிலியம் ஐதராக்சைடை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்தினால் பெரிலியம் நைட்ரேட்டு தயாரிக்கலாம் [2]
தீங்குகள்அனைத்து பெரிலியம் சேர்மங்களைப் போலவே பெரிலியம் நைட்ரேட்டும் நச்சுத் தன்மை கொண்டுள்ள ஒரு வேதிப்பொருளாகும். சிறிய அளவு உப்பும் உறுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது. பெரிலியம் நைட்ரேட்டை எரிய வைக்கும் போது உறுத்தக்கூடிய அல்லது நச்சுத்தன்மையுடைய புகையை வெளிவிடுகிறது. அதிக அளவு புகையை சிறிதுநேரத்திற்கு முகர நேர்ந்தாலும் கடுமையான நுரையீரல் அழற்சி நோய்க்கு ஆளாக நேரிடும். ஆனால் அதற்குரிய அறிகுறிகள் மூன்று நாட்களுக்குப் பின்னரே வெளியில் தெரியும்[1]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia