தத்தாத்ரேயா ஹோசாபலே
தத்தாத்ரேயா ஹோசாபலே (Dattatreya Hosabale) (பிறப்பு:1 டிசம்பர் 1955) இந்திய சமூக ஆர்வலர் ஆவார். இவர் 20 மார்ச் 2021 அன்று ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் சர்காரியவா எனும் பொதுச் செயலர் பதவிக்கு, மூன்று ஆண்களுக்கு, அகில இந்திய பிரதிநிதிகள் சபையால் தேர்வு செய்யப்பட்டார். இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியில் அறிவித்த நெருக்கடி நிலை காலத்தில் தாத்ரேயா ஹோசாபலே மிசா சட்டத்தின் கீழ் 1975 - 1977 கால கட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தார். இவர் அகில பாரத வித்தியார்த்தி பரிசத்த்தின் பொதுச்செயலராக 15 ஆண்டுகள் பதவி வகித்தார். இளமை வாழ்க்கைதத்தாத்ரேயா ஹோசாபலே கர்நாடகா மாநிலத்தின் சிமோகா மாவட்டத்தில் உள்ள சோரப் கிராமத்தில் 1 டிசம்பர் 1955இல் பிறந்தவர்.[1] இவரது பெற்றோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.[2] தத்தாத்ரேயா, 1968 ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். இதன் பின்னர் 1972 ம் ஆண்டு அகில அகில பாரத வித்யார்த்தி பரிசத்தில் இணைந்த இவர், அந்த அமைப்பின் பொது செயலராக 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். ஆர் எஸ் எஸ் அமைப்புடன் தொடர்புஇவர் மைசூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்.[3].இவர் 1972-இல் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பில் சேர்ந்தார். பின்னர் 1978-இல் அகில் பாரத மாணவர் அமைப்பில் இணைந்தார். பின்னர் அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் பதவியில் 15 ஆண்டுகள் பணியாற்றியானர்.[4][5][6] அசாம் மாநிலத்தில் இளைஞர் வளர்ச்சி மையத்தினை நிறுவினார். இவர் கன்ன்ட மொழியில் அசீமா எனும் மாத இதழை வெளியிட்டார். 2004-இல் இவர் இராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் அறிவு ஜிவிகளில் ஒருவராக இருந்தார். இவர் கன்னடம், இந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் சமசுகிருத மொழிகளில் புலமை கொண்டவர்.[7] இவர் இந்திய தேசியத்தில் பற்று கொண்டவர்.[8] இவர் 2004-இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் துணை பொதுச்செயலர் ஆனார். 20 மார்ச் 2021 அன்று ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு, பசு பாதுகாப்பு, குடும்ப கவுன்சிலிங், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அநீதியை அகற்றுதல் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகியவை ஆர் எஸ் எஸ் அமைப்பின் இலக்குகளாக இருக்கும் என அறிவித்தார்.[9][10].[11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia