தனுஷா மாவட்டம்
![]() தனுஷா மாவட்டம் (Dhanusa District), (நேபாளி: धनुषा जिल्ला ⓘ, மத்திய நேபாளத்த்தின், மாநில எண் 2-இல் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் ஜனக்பூர் நகரம் ஆகும். 1180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தனுஷா மாவட்டத்தின் மக்கள் தொகை 7,54,777 ஆக உள்ளது. [1] இம்மாவட்டத்தில் பொதுவாக 85% மக்கள் மைதிலி மொழி மற்றும் 4.4% விழுக்காடு மக்கள் நேபாள மொழி பேசுகின்றனர். வரலாறுஇராமாயண காவியத்தின் நாயகி சீதை பிறந்த ஊர், இம்மாவட்டத்தின் முக்கிய நகரான ஜனக்பூர் ஆகும். ஜானகி கோயில் மற்றும் இராமன் – சீதையின் திருமண அரங்கம் ஜனக்பூரில் உள்ளது. பிற தகவல்கள்இம்மாவட்டம் ஏழு நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. நேபாளத்தின் முதல் அதிபர் ராம் பரன் யாதவ், இம்மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதி எண் 5-இலிருந்து ஏப்ரல் 2008-இல் போட்டியிட்டு வென்றவர். தனுஷா மாவட்டத்தின் தொடருந்து நிலையம், இந்தியாவின் ஜெயா நகருடன் இணைக்கிறது.[2] புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்![]() தனுஷா மாவட்டம் ஆறு நகராட்சி மன்றங்களையும், 97 கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia