பாசூரா மாவட்டம்![]() பாசூரா மாவட்டம் (Bajura District) (நேபாளி: बाजुरा जिल्लाⓘ), நேபாள மாநில எண் 7-இன் ஒன்பது மாவட்டங்களில் ஒன்றானதும், நேபாளத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றானதும் ஆகும். மேல் இமயமலையில் அமைந்த இம்மாவட்டத் தலைமையிடம் மார்த்தாடி நகரம் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாசூரா மாவட்டத்தின் மக்கள் தொகை 134912 ஆகும். [1] இதன் பரப்பளவு 2,188 சதுர கிலோ மீட்டராகும். இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 13,433 மில்லி மீட்டராகும். தட்ப் வெப்ப நிலை, கோடை காலத்தில் 40 பாகை செல்சியசும், குளிர் காலத்தில் பூஜ்யம் பாகை செல்சியசுக்கும் கீழ் உள்ளது. வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு இம்மாவட்ட மக்களின் முக்கியத் தொழிலாகும். நகராட்சிகளும், கிராம வளர்ச்சி மன்றங்களும்![]() இம்மாவட்டம் ஒரு நகராட்சியும், 24 கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது. மக்கள் தொகையில்2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 134,912 ஆகும். அதில் பெண்கள் 69,106 (51%) ஆகவும், ஆண்கள் 65,806 (49%) ஆகவும் உள்ளனர். 24,908 வீடுகள் கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 62 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். எழுத்தறிவு விகிதம் 32% ஆக உள்ளது. இம்மாவட்டத்தில் பல இன மக்கள் வாழ்ந்தாலும், பேச்சு மொழி நேபாள மொழியாக உள்ளது. புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
படக்காட்சியகம்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia