சி ராட் மலை
![]() சி ராட் மலை (ஆங்கிலம்: Si Rat Malai; மலாய் மொழி: Si Rat Malai; சயாம்: สี่รัฐมาลัย) என்பது பிரித்தானிய மலாயாவின் வடபகுதியில் இருந்த கெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு மாநிலங்கள்; தாய்லாந்தின் முன்னாள் நிர்வாகப் பிரிவாக இருந்ததைக் குறிப்பிடுவதாகும். இருப்பினும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் சரண் அடைந்ததும்; கெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு ஆகிய நான்கு மாநிலங்களும் தாய்லாந்திடம் இருந்து பிரித்தானிய மலாயாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. இடைப்பட்ட ஏறக்குறைய 18 மாதங்களுக்கு அந்த மலாயா மாநிலங்களைத் தாய்லாந்து அரசாங்கம் நிர்வகித்து வந்தது.[1] விளக்கம்(சி ராட் மலை; Si Rat Malai; สี่รัฐมาลัย)
பொதுஅந்த நான்கு மாநிலங்களும் தாய்லாந்திடம் ஒப்படைக்கப் பட்டதும், தாய்லாந்து அதிகாரிகள் அலோர் ஸ்டார் நகரத்தை சி ராட் மலையின் நிர்வாக மையமாக மாற்றினர்கள். அதன் பின்னர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாகப் பெயர் வைத்தார்கள். அந்தப் பெயர்ப் பட்டியல்:
வரலாறு1941 டிசம்பர் 14-ஆம் தேதி, தாய்லாந்து இராணுவத் தளபதி பிளேக் பிபுன்சோங்க்ராம் (General Plaek Phibunsongkhram); ஜப்பானியப் பேரரசுடன் ஓர் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மலாயாவை ஜப்பானியர் ஆக்கிரமிப்பு செய்யும் போதும் (Malayan Campaign); மற்றும் பர்மா மீது படையெடுக்கும் போதும் (Burma Campaign); தாய்லாந்து தன் ஆயுதப் படைகளை அனுப்பி ஜப்பானியருக்கு ஆதரவு வழங்கும் எனும் இரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. போர்ப் பிரகடனம்21 டிசம்பர் 1941-இல் தாய்லாந்து மற்றும் ஜப்பான் இடையே ஒரு கூட்டணி ஒப்பந்தம் முறையாகக் கையெழுத்தானது. 25 ஜனவரி 1942 அன்று, அமெரிக்கா தலையிலான நேச நாடுகள் தோல்வி அடைந்ததாக நம்பிய தாய்லாந்து அரசாங்கம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மீது போர்ப் பிரகடனம் செய்தது. ஜப்பானியர்களுடன் இராணுவக் கூட்டுச் சேர்ந்து கொண்டதற்கான வெகுமதியாக, பிரித்தானியர்களிடம் இருந்து பெறப்பட்ட கெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு ஆகிய நான்கு மலாயா மாநிலங்கள்; மற்றும் பிரித்தானிய பர்மாவில் உள்ள சான் மாநிலத்தின் சில பகுதிகள் (Shan State in British Burma) தாய்லாந்திற்கு வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டது.</ref>[3][4] ஜப்பானியப் பிரதமர் இடாக்கி தோஜோ![]() 21 டிசம்பர் 1941-இல், ஜப்பானியப் பிரதமர் இடாக்கி தோஜோ (Hideki Tojo), தாய்லாந்துக்கும் ஜப்பானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு ஆகிய நான்கு மலாயா மாநிலங்கள் தாய்லாந்திற்கு வழங்கப் படுவதாக அறிவித்தார். 18 அக்டோபர் 1943 முதல், இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானியர்கள் சரணடையும் வரை, கெடா, பெர்லிஸ், கிளாந்தான், திராங்கானு ஆகிய நான்கு மலாயா மாநிலங்கள் தாய்லாந்து நிர்வாகத்தின் கீழ் இருந்தன. ஒப்பந்தத்தின் விளைவாக அந்தக் காலக் கட்டத்தில் சி ராட் மலையில் பிறந்தவர்கள் தாய்லாந்து மன்னரின் குடிமக்களாக இன்றும் கருதப் படுகிறார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவு அடைந்ததும், செப்டம்பர் 2, 1945-இல், அந்த நான்கு மாநிலங்களும் பிரித்தானியர்களிடமே மீண்டும் திருப்பி ஒப்படைக்கப்பட்டன.[5][6] நிர்வாகம்![]() இராணுவ மேற்பார்வையில் இருந்த சி ராட் மலை அரசாங்கம், தாய்லாந்து அரசு ஊழியர்களால் நிர்வாகம் செய்யப்பட்டன. இருப்பினும், சி ராட் மலை அரசாங்க நிர்வாகத்தில், ஜப்பானிய அதிகாரிகள் பெரிய அளவிலான கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டனர். ஜப்பானிய துருப்புக்களும்; கெம்பித்தாய் (Kempeitai) எனும் ஜப்பானிய இராணுவப் போலீசாரும்; நான்கு மாநிலங்களிலும் தொடர்ந்து வைக்கப் பட்டனர். இரயில் சேவைகள், தாய்லாந்து மாநில இரயில்வே அதிகாரிகளால் (State Railway of Thailand), கிளாந்தானில் மட்டும் இயக்கப்பட்டன. பிரித்தானிய மலாயா இராணுவம்அதே சமயத்தில் கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் இருந்த இரயில் இணைப்புகள் ஜப்பானியர்களின் கைகளில் இருந்தன. தந்தி, அஞ்சல் மற்றும் தொலைபேசி சேவைகளின் முழுக் கட்டுப்பாட்டையும் ஜப்பானியர்கள் தக்க வைத்துக் கொண்டனர்.[7] இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த போது தாய்லாந்து ஜப்பானுடன் தொடர்ந்து நட்புறவில் இருந்தது. இருப்பினும் செப்டம்பர் 1945-இல், அந்த நான்கு மாநிலங்களின் கட்டுப்பாடும் மீண்டும் மலாயா பிரித்தானிய இராணுவ நிர்வாகத்தின் (British Military Administration (Malaya) கீழ் கொண்டு வரப்பட்டது. ஏப்ரல் 1, 1946-இல் அந்த முன்னாள் மாநிலங்கள் மலாயா ஒன்றியத்தில் (Malayan Union) இணைந்தன.[8] ஜப்பானிய ஆளுநர்கள்
தாய்லாந்து இராணுவ ஆணையர்
தாய்லாந்து அரசு ஆணையர்
கிளாந்தான்ஜப்பானிய ஆளுநர்கள்
தாய்லாந்து இராணுவ ஆணையர்கள்
திராங்கானுஜப்பானிய ஆளுநர்கள்
தாய்லாந்து இராணுவ ஆணையர்
Perlisஜப்பானிய ஆளுநர்கள்
தாய்லாந்து இராணுவ ஆணையர்
மேற்கோள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia