ஹெல்லியோபோலிஸ் (பண்டைய எகிப்து)
ஹெல்லியோபோலிஸ் (Heliopolis) பண்டைய எகிப்தின் வட எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இதனை சூரியனின் நகரம் என்பர்.[1] இந்நகரம் பண்டைய எகிப்திய சமயத்தின் மையமாக விளங்கியது. இப்பண்டைய நகரம் தற்போது கெய்ரோ நகரத்திற்கு வடகிழக்கில் ஆயின் சாம் பகுதியில் உள்ளது. பழைய எகிப்திய இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181) மற்றும் மத்தியகால எகிப்திய இராச்சிய (கிமு 2055 – கிமு 1650) ஆட்சிகளில் இந்நகரம் பெரும் புகழுடன் விளங்கியது. தற்போது இந்நகரத்தின் பண்டைய எகிப்தியக் கோயில்கள், கட்டிட அமைப்புகள் பெரிதும் சிதிலமடைந்துள்ளது. பண்டைய எகிப்தின் வரலாற்று ஆவணங்கள், இந்நகரத்தில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நகரத்தில் 12-வம்சத்தின் பார்வோன் முதலாம் செனுஸ்ரெத் எகிப்திய சூரியக் கடவுள் இராவினை போற்றும் வகையில் நிறுவிய 120 டன் எடையும், 21 மீட்டர் உயரம் கொண்ட சிவப்பு கருங்கல் கல்தூபி கண்டெடுக்கப்பட்டுள்ள்து.[2] பழைய எகிப்திய இராச்சியத்தின் பிரமிடுகள் குறித்த ஆவணங்களில், இந்நகரம் சூரியக் கடவுள் இராவின் வீடு என குறித்துள்ளது.[3] செய்திகளில்இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எகிப்து சென்ற போது 25 சூன் 2023 அன்று இரண்டாம் உலக போரின் போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.[4] ![]() ![]() இதனையும் காண்கமேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia