கிழக்கு கட்டளையகம் (Eastern Command), இந்தியத் தரைப்படையின் 7 கட்டளையகங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது கிழக்கு கட்டளையகம் 1 நவம்பர் 1920 அன்று நிறுவப்பட்டது.[1]இக்கட்டளைகம் முத்த லெப். ஜெனரல் தலைமையிலான தலைமைக் கட்டளைத் தளபதியின் கீழ் இயங்குகிறது. இக்கட்டளையகத்தின் தற்போதைய தலைமைக் கட்டளை தளபதி லெப். ஜெனரல் இராம் சந்தர் திவாரி ஆவார்.
கிழக்கு கட்டளையகத்தின் கீழ் 3வது பெரும்படையணி (Corps), 4வது பெரும் படையணி, 7வது பெரும்படையணி
33வது பெரும்படையணி மற்றும் 23 தரைப்படை டிவிசன்கள் உள்ளது. [3][4]
Richard A. Renaldi; Ravi Rikhe (2011), 'Indian Army Order of Battle', Orbat.com for Tiger Lily Books: A division of General Data LLC, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-9820541-7-8.