நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2024
|
|
|
இலங்கை
|
நியூசிலாந்து
|
காலம்
|
18 செப்டம்பர் – நவம்பர் 2024
|
தலைவர்கள்
|
தனஞ்சய டி சில்வா (தேர்வு)
|
டிம் சௌத்தி (தேர்வு)
|
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
|
முடிவு
|
2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
|
அதிக ஓட்டங்கள்
|
கமிந்து மெண்டிஸ் (309)
|
இரச்சின் இரவீந்திரா (153)
|
அதிக வீழ்த்தல்கள்
|
பிரபாத் ஜெயசூரிய (18)
|
வில்லியம் ஓ'ரோர்க் (8) அஜாசு பட்டேல் (8)
|
தொடர் நாயகன்
|
பிரபாத் ஜெயசூரிய (இல)
|
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
|
முடிவு
|
3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
|
அதிக ஓட்டங்கள்
|
குசல் மெண்டிசு (217)
|
உவில் யங் (130)
|
அதிக வீழ்த்தல்கள்
|
மகேசு தீக்சன (5)
|
மைக்கேல் பிரேசுவெல் (5)
|
தொடர் நாயகன்
|
குசல் மெண்டிசு (இல)
|
இருபது20 தொடர்
|
முடிவு
|
2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
|
அதிக ஓட்டங்கள்
|
பத்தும் நிசங்க (71)
|
உவில் யங் (49)
|
அதிக வீழ்த்தல்கள்
|
வனிந்து அசரங்க (6)
|
கிளென் பிலிப்சு (4) சாக் போல்க்சு (4)
|
தொடர் நாயகன்
|
வனிந்து அசரங்க (இல)
|
நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2024 செப்டம்பரிலும் பின்னர் 2024 நவம்பரிலும் இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன் விளையாடியது.[1][2] இச்சுற்றில் இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[3] தேர்வுத் தொடர் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக நடைபெற்றது.[4][5] 2023 நவம்பரில், இலங்கை துடுப்பாட்ட வாரியம் இச்சுற்றுப் போட்டிகளை உறுதிப்படுத்தியது.[6] நியூசிலாந்து கடைசியாக 2019 இல் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
முதலாவது தேர்வுப் போட்டியின் காலம் ஆறு நாட்கள் என (21 செப்டம்பர் அரசுத்தலைவர் தேர்தலுக்காக ஓய்வு நாளாக இருக்கும் என) இலங்கை துடுப்பாட்ட வாரியம் அறிவித்தது.[7]
அணிகள்
இரண்டாவது தேர்வுப் போட்டிக்கு முன்னதாக, விஷ்வா பெர்னாண்டோ காயமடைந்ததால் நிசான் பீரிசு இலங்கை அணியில் விளையாடினார்.[10]
தேர்வுத் தொடர்
1-ஆம் தேர்வு
|
எ
|
|
305 (91.5 நிறைவுகள்) கமிந்து மெண்டிஸ் 114 (173) வில்லியம் ஓ'ரோர்க் 5/55 (18.5 நிறைவுகள்)
|
|
340 (90.5 நிறைவுகள்) டொம் லேத்தம் 70 (111) பிரபாத் ஜெயசூரிய 4/136 (40 நிறைவுகள்)
|
|
|
|
2-ஆவது தேர்வு
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- நிசான் பீரிசு (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- கமிந்து மெண்டிஸ் (இல) தனது 1,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[11][12]
- நிசான் பீரிசு (இல) தனது முதலாவது தேர்வு ஐவீழ்த்தலைப் பெற்றார்.[13]
- உலகத் தேர்வு வாகைப் புள்ளிகள்: இலங்கை 12, நியூசிலாந்து 0.
இ20ப தொடர்
1-ஆவது இ20ப
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மிட்செல் ஹே (நியூ) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- குசல் பெரேரா இ20ப போட்டிகளில் இலங்கைக்கு அதிக ஓட்டங்களை எடுத்து திலகரத்தின தில்சானின் சாதனையை முறியடித்தார்.[14]
2-ஆவது இ20ப
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- லொக்கி பெர்கசன் (நியூ) மூவிலக்கை எடுத்தார்.[15]
ஒநாப தொடர்
1-ஆவது ஒநாப
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- 49.2 ஓவர்களானபோது மழை காரணமாக இலங்கை அணி மேலும் விளையாட முடியவில்லை.
- மழை காரணமாக நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 27 நிறைவுகளுக்கு 221 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- மிட்செல் ஹே, டிம் ரொபின்சன், நேதன் சிம்பித் (நியூ) தமது முதலாவது ஒநாப போட்டியில் விளையாடினர்.
2-ஆவது ஒநாப
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்ட இரண்டு அணிகளுக்கும்47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
- 2012 இற்குப் பின்னர் இலங்கை நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒநாப தொடர் வெற்றி இதுவாகும்.[16]
3-ஆவது ஒநாப
|
எ
|
|
உவில் யங் 56* (68) மிகமது சிராசு 1/23 (5 நிறைவுகள்)
|
|
|
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
- சமிந்து விக்கிரமசிங்க (இல), சாக் போல்க்சு (நியூ) இருவரும் தாது முதலாவது ஒநாப போட்டியில் விளையாடினர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்