மெல்லிய உருண்டை வடிவலான களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட குடியிருப்புகள், பயிர்த் தொழில், காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், இறந்தவர்களை சடலங்களை குடியிருப்புகளின் தரையின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்தல் இக்காலத்தின் சிறப்பம்சமாகும்.[3][4]
இப்புதிய கற்காலத்திற்கு எதுக்காட்டாக எரிக்கோ மற்றும் பெருவயிறு மலை தொல்லியல் களங்கள் விளங்குகிறது. இக்கற்காலத்தில் சுட்ட களிமண் மட்பாண்டத்தின் பயன்பாடு மக்கள் அறிந்திருக்கவில்லை. இக் கற்காலத்திற்கு பின்னர் இடைக் கற்காலத்தில்லெவண்ட் பகுதிகளில்
நாத்தூபியன் பண்பாடு நிலவியது.
இக்காலத்திய கிமு 9,000 முந்தைய உலகின் முதல் மக்கள் குடியிருப்பு நகரம் எரிக்கோ தொல்லியல் களத்தின் அகழ்வாய்வுவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[6]
எரிக்கோ நகரததின் மக்கள்தொகை 2,000 – 3,000 கொண்டிருந்தது. மக்கள் பாதுகாப்பிற்கு நகரத்தைச் சுற்றி கனமான சுவர்களும், காவல் கோபுரங்களும் கொண்டிருந்தன.[7][8][9]
இக்கற்காலத்தில் இறந்தவர்களை அடக்கும் செய்யும் முறை வித்தியாசமானது. குடியிருப்பின் தரையில் பள்ளம் தோண்டி இறந்தவர்களை புதைக்கும் முறை விசித்திரமான வழக்கம் நிலவியது. கென்யான் தொல்ல்லியல் களத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளின் தரைதளம், அஸ்திரவாரம் மற்றும் சுவர்களுக்கு இடையே 279 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4]
கற்கருவிகள்
இக்காலத்தில் கற்களால் ஆன கூர்மையான ஈட்டி, கத்தி, கோடாரி, அரிவாள், வளைந்த கூர்மையான வாசி போன்ற கற்கருவிகள் மக்கள் வேட்டையாடுவதற்கும், பயிர்தொழில் செய்வதற்கும், வீட்டுப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தினர்.
பயிர்த்தொழில் மற்றும் தாணியக் களஞ்சியங்கள்
வரலாற்று காலத்திற்கு முன்னர் உலக வரைபடத்தில் வேளாண்மை தோன்றிய பகுதிகள்: வளமான பிறை பிரதேசம் (11,000 BP), சீனாவின் யாங்சி ஆறு மற்றும்மஞ்சள் ஆறு வடிநிலங்கள் (9,000 BP) நியூ கினிவின் மேட்டு நிலங்கள் (9,000–6,000 BP), நடு மெக்சிகோ (5,000–4,000 BP), வடக்கின் தென் அமெரிக்கா (5,000–4,000 BP), சகாரா கீழமை ஆபிரிக்கா (5,000–4,000 BP), வட அமெரிக்கா கிழக்கு பகுதி (4,000–3,000 BP).[14]
மக்கள் கூட்டமாக வாழ்ந்த இக்காலத்தில் உள்ளூர் சிறுதாணியங்களான பார்லி, ஓட்ஸ் பயிரிட்டனர். தாணியங்களை தாணியக் களஞ்சியங்களில் சேமித்து வைத்தனர்.
↑Mithen, Steven (2006). After the ice : a global human history, 20,000–5,000 BC (1st Harvard University Press pbk. ed.). Cambridge, Massachusetts: Harvard University Press. p. 63. ISBN978-0-674-01999-7.
↑ 4.04.1Mithen, Steven (2006). After the ice : a global human history, 20,000–5,000 BC (1st Harvard University Press pbk. ed.). Cambridge, Massachusetts: Harvard University Press. p. 60. ISBN978-0-674-01999-7.
↑Mithen, Steven (2006). After the ice : a global human history, 20,000–5,000 BC (1st Harvard University Press pbk. ed.). Cambridge, Massachusetts: Harvard University Press. p. 59. ISBN978-0-674-01999-7.
O. Bar-Yosef, The PPNA in the Levant – an overview. Paléorient 15/1, 1989, 57–63.
J. Cauvin, Naissance des divinités, Naissance de l’agriculture. La révolution des symboles au Néolithique (CNRS 1994). Translation (T. Watkins) The birth of the gods and the origins of agriculture (Cambridge 2000).