மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) (Pre-Pottery Neolithic B (PPNB) இது மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் ஒரு பகுதியாகும். இக்காலத்திய பண்பாடு வளமான பிறை பிரதேசத்தின் மேல் மெசொப்பொத்தேமியாவில் கிமு 8,800 முதல் கிமு 6,500 வரை விளங்கியது.[1] துருக்கியின் பெருவயிறு மலை மற்றும் எரிக்கோ நகரத்தின் தொல்லியல் களங்களிலிருந்து இக்கற்காலத்திய பண்பாடு அறிய முடிகிறது. மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) போன்று, மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), இடைக் கற்காலத்திய நூத்துபியன் பண்பாட்டிலிருந்து வளர்ச்சியுற்றது. இக்கற்காலம் அனதோலியாவின் வடகிழக்கில் தோன்றியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது. வாழ்க்கை முறைமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்தில் காட்டு விலங்குகளை வீட்டு வளர்ப்பு விலங்குகளாக பழக்கப்படுத்தினர். மேலும் மக்கள் வேட்டைத் தொழிலுடன், வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டனர். தீக்கல்லை நெருப்பு மூட்ட பயன்படுத்தினர். தென் லெவண்ட்டில் மக்கள் வட்டம் மற்றும் எண்கோண வடிவத்தில் குடியிருப்புகள் கட்டினர். குடியிருப்புகளின் தளம் மற்றும் சுவர்கள் வெள்ளை களிமண் மற்றும் சுண்ணாம்புக் கல் பூச்சுகளால் அமைக்கப்பட்டது. ![]() களிமண் மற்றும் சுண்ணாம்புக் கலவைகளிலிருந்து மட்பாண்டங்கள் தயாரித்தனர்.[2]சுண்ணாம்புக் கற்களாலான துவக்க கால வெள்ளை மட்பாண்டங்கள் கிமு 7,000-முதல் பயன்படுத்தப்பட்டது. [3] லெவண்ட் பகுதியில் மேற்கு கலீலி மற்றும் அயின் காசல், மேல் மெசொபொத்தோமியாவில் உள்ள தொல்லியல் களங்களில் செவ்வக வடிவத் தரைகளில் சுண்ணாம்புக்கல் கலவை பூச்சு பூசப்பட்டிருந்தது. [4] இக்காலம் கிமு 7,000 மற்றும் கிமு 6,000-க்கும் இடைப்பட்டதாகும். கிமு 9,000 - கிமு 6,000 காலப்பகுதிகளில் லெவண்ட் பகுதியில் இறந்தவர்களின் உடலில் சுண்ணாம்புப் பூச்சு பூசி வீட்டின் தரையில் குழி தோண்டி அடக்கம் செய்யும் பழக்கம் கொண்டிருந்தனர். செய்தனர். [5] சமூகம்![]() டேனியல் ஸ்டோர்டுயூர் எனும் தொல்லியல் அறிஞர் அஸ்வத் தொல்லியல் மேட்டில், கிமு 8,700 ஆண்டு காலத்திய பெரிய அளவிலான வேளாண் குடியிருப்பை சிரியாவின் டமாஸ்கஸ் நகரத்தின் எர்மோன் மலை மலையருகே கண்டுபிடித்தார். மேலும் அதே போன்ற தொல்லியல் வேளாண் குடியிருப்புகள் அஸ்வத் தொல்லியல்மேடு, இராமாத் தொல்லியல் மேடு மற்றும் கோரைப்பு தொல்லியல் மேடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.[6][7][8][9][10][11][12][13] தொல்பொருட்கள்தற்கால மெசொப்பொதோமியாவின் வடகிழக்கு சிரியாவில் களிமண் சுடுமட்பாண்டம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் கிமு 8,000-இல் கருங்கல், அரகோனைட்டு, சுண்ணாம்புக் கல், போன்றவற்றால் செய்த மெருகூட்டப்பட்ட பாண்டங்கள் மக்கள் பயன்படுத்தினர்.[14]
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்திய பிட்டுமன் மற்றும் சுண்ணக்கல்லில் செய்த ஆண் & பெண் சிற்பங்கள், (கிமு 9000–7000), பெக்கெரியா தொல்லியல் மேடு சிக்காகோ பல்கலைக்கழக கீழ்திசை நிறுவன அருங்காட்சியகம்
![]() ![]() இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia