யுரேனியம் (Uranium) என்னும் தனிமம் பளபளப்பான வெளிறிய சாம்பல் நிறத்தில் திண்ம நிலையில் இருக்கும் ஒரு பொருள். இதன் அணுவெண் 92, மற்றும் இதன் அணுக்கருவில் 146 நொதுமிகள் உண்டு. இதன் வேதியியல் குறியெழுத்து U ஆகும். இதுவே இயற்கையில் கிடைக்கும் அதிக அணுநிறை கொண்ட தனிமம். இதன் அணுநிறை வெள்ளீயத்தை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகம். இது தனிமங்களின் அட்டவனையில்ஆக்ட்டினைடுகள் வரிசையைச் சேர்ந்த ஒரு தனிமம். யுரேனியம் சிறிதளவு கதிரியக்க இயல்பு கொண்ட தனிமம். இத் தனிமம் நில உருண்டையில், மண்ணிலும் பாறைகளிலும், நீரிலும் மிகமிகச் சிறிதளவே கிடைக்கின்றது. பெரும்பாலும் யுரேனைட்டு போன்ற கனிமப்படிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. கிடைக்கும் அளவு மில்லியனுக்கு ஒரு சில பகுதிகள் என்னும் சிறிய லேயே கிடைக்கின்றது.
இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் அணுக்கள் பெரும்பாலும் யுரேனியம்-238 (99.275%), மற்றும் யுரேனியம்-235 (0.72%) என்னும் வகைகளாகவும், மிக மிகச் சிறிதளவு (0.0058%) யுரேனியம்-235 என்னும் வகையாகவும் உள்ளன. யுரேனியம் மிக மெதுவாக ஆல்ஃவாத் துகள்களை உமிழ்கின்றது. யுரேனியம்-238 இன் அரைவாழ்வுக் காலம் 4.5 பில்லியன் ஆண்டுகளாகும். யுரேனியம்-235 இன் அரைவாழ்வுக் காலம் 700 மில்லியன் ஆண்டுகளாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு நில உலகத்தில் ஒரு பொருளின் தின்மையை அறிய யுரேனிய-தோரிய தொன்மையறி முறை என ஒரு முறை நிறுவப்பட்டுள்ளது. யுரேனியமானது தோரியம், பொலோனியம் ஆகிய இரண்டுடன் சேர்ந்து உள்ள மூன்று அணுச் சிதைவு கொள்ளும் பொருட்கலுள் ஒன்றாகும். இவ்வாறு அணுச்சிதைவு கொள்ளும்பொழுது ஏராளமான வெப்பம் உண்டாவதால் அணு உலைகள் இயக்கி அணுகுண்டு முதலிய அணு ஆயுதங்கள் செய்ய உதவுகின்றது. குறைந்த அளவு யுரேனியம்-235 என்னும் ஓரிடத்தான் கொண்ட யுரேனியத்தை (யுரேனியம்-238), குறைவுற்ற யுரேனியம் என்று கூறுவர். இந்த குறைவுற்ற யுரேனியமும் மிகவும் அடர்த்தியான பொருளாகையால் (வெள்ளீயத்தை விட 70% அதிகம், அடர்த்தி = 19050 கிலோ.கி /மீ3 (kg/m³) ),
யுரேனியம் கண்ணாடிகளில் நிறமூட்டியாகவும் பயன்படுகின்றது. மஞ்சள் கலந்த சிவப்பு, எலுமிச்சை நிற மஞ்சள் போன்ற நிறங்கள் தரவல்லது.
பண்புகள்
யுரேனியம் மிகவும் கடினமான ஒரு வெள்ளி நிற கதிரியக்க உலோகமாகும்.மேலும் இது அதிகமாக நீட்டப்படக்கூடிய,உடையம் தன்மை கொண்ட உலோகம்.மேலும் இது குறைந்த மின்கடத்தும் திறன் கொண்ட நேர் மின்தன்மை கொண்ட உலோகமாகும்.மேலும் இது அடர்த்தி அதிகமான உலோகமாகும்.
யுரேனிய அதிக வினைத்திறன் கொண்ட உலோகம் ஆகும்.மேலும் இது ஹைட்ரோகுளோரிக் மற்றும் நைட்ரிக் அமிலங்களில் கரையும் தன்மை கொண்டது மேலும் இது குளிர்ந்த நீரில் காற்றுடன் ஆக்சிசனேற்றமடைந்து அடர் நிறமுடைய யுரேனியம் ஆக்சைடு படலத்தை உருவாக்குகின்றது. உள்ள யுரேனியம் இரசாயன எடுக்கப்பட்டு துறையில் பொருந்தக்கூடியனவாக யுரேனியம் டை ஆக்சைடு அல்லது மற்ற ரசாயன வடிவங்கள் மாற்றப்படுகிறது.
யுரேனியத்தின் ஐசோடோப்பான யுரேனியம்-235 உலகின் பெரும்பாலான அணுஉலைகளில் எரிபொருளாக பயன்படுகிறது.
யுரேனியம் 235 அணுக்கரு ஓரிடத்தனை உறிஞ்சும் போது இரண்டாக பிளவு படுகிறது மேலும் அதனுடம் கூடுதலாக 3 ஓரிடத்தான்களை உருவாக்கும் இவை மேலும் சில அணுகருக்களை பிரிக்கும்.இது அணுக்கரு சங்கிலி தொடர்வினை என அழைக்கப்படுகிறது.
பயன்கள்
இராணுவ பயன்பாடுகள்
இராணுவ துறையில் யுரேனியம் உயர் அடர்த்தி ஊடுருவியாக பயன்படுகிறது.இந்த வெடிமருந்துகள் மற்றும் 1-2 % யுரேனியக்கலப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவே இது தடித்த சுவர்களையும்,கவச வாகனங்களையும் அழிக்க உதவுகிறது[3].
மட்டுப்படுத்தப்பட்ட யுரேனியம் கதிரியக்க பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன்களை தயாரிக்கப்பயன்படுகிறது.
மேலும் இது விமானங்கின் எதிர் எடையாகவும் ஏவுகணைகளின் கவச உலோகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாம் உலக போர் மற்றும் பனிப்போருக்கு பின்னர் யுரேனியம் 235 அணு ஆயுதங்களில் வெடிபொருளாக பயன்படுகிறது.
பொது பயன்பாடுகள்
யுரேனியத்தின் முக்கிய பொதுமக்களின் பயன்பாடானது அணுசக்தி நிலையங்களில் வெப்ப ஆற்றல் மூலமாக உள்ளது.
கணக்கீடுகளின் படி ஒரு கிலோ யுரேனியம்-235 உருவாக்கும் ஆற்றல் சுமார் 80 டெர்ரா ஜுல்கள் ஆகும்(8×1013 இது 3௦௦௦ டன் நிலக்கரியை எரிக்கும் போது உருவாகும் ஆற்றலுக்கு சமமானதாகும்.
யுரேனிய தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ரேடியமானது கடிகாரங்களிலும் மற்ற கருவிகளிலும் இருளில் ஒளிரும் பூச்சாக பயன்படுகிறது.
யுரேனிய கழிவானது மண்பாண்ட தொழிலில் நிரமூட்டியாக பயன்படுகிறது.
யுரேனிய கூட புகைப்பட விளக்கு இழைகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது
யுரேனியம் உப்புகள் பட்டு,கம்பளி மற்றும் தோல் பொருட்களில் நிறமேற்றியாக பயன்படுகிறது
யுரேனிய உலோகம் உயர் திறன் கொண்ட எக்ஸ் கதிர் கருவிகளில் இலக்காக பயன்படுகிறது.
வெற்றிட யுரேனிய புகைப்பட விளக்கு
காணப்படும் இடங்கள்
2005 ஆம் ஆண்டு வரை உலகில் பதினேழு நாடுகள் அதிக அளவில் யுரேனியத்தை செறிவுபடுத்தப்பட்ட யுரேனியம் ஆக்சைடாக தயாரிகின்றனர் அவற்றுள் கனடா(உலக உற்பத்தியில் 27.9%) மற்றும் ஆஸ்திரேலியா (22.8%) ஆகியவை பெரும்பாலான அளவிலும் கஜகஸ்தான் (10.5%), ரஷ்யா (8.0%), நமீபியா (7.5%), நைஜர் (7.4%), உஸ்பெகிஸ்தான் (5.5%), அமெரிக்கா (2.5%), அர்ஜென்டீனா (2.1%), உக்ரைன் (1.9%), சீனா (1.7%) குறிப்பிடத்தக்க அளவிலும் தயாரிக்கின்றனர். மற்றும் ஆஸ்திரேலியா, கனடா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது கஜகஸ்தான் உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது உலகில் உள்ள யுரேனியம் குறைந்தது 85 ஆண்டுகளுக்கு போதுமானதாக கருதப்படுகிறது.
குறிப்புகள்
↑Morss, L.R.; Edelstein, N.M. and Fuger, J., ed. (2006). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Netherlands: Springer. ISBN9048131464.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
Seaborg, Glenn T. (1968). "Uranium". The Encyclopedia of the Chemical Elements. Skokie, Illinois: Reinhold Book Corporation. pp. 773–786. LCCCN 68-29938. {{cite book}}: Invalid |ref=harv (help)