அரசினர் கலைக் கல்லூரி, கரூர்

அரசினர் கலைக் கல்லூரி, கரூர்
குறிக்கோளுரைஉள்ளம் உடைமை உடைமை
வகைஅரசினர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1966
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்முனைவர் திருமதி கௌசல்யா தேவி
அமைவிடம், ,
இணையதளம்http://gackarur.ac.in

அரசினர் கலைக் கல்லூரி, கரூர் இந்தியாவின் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1966ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்று தன்னாட்சி கல்லூரியாக இயங்கி வருகிறது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் "ஏ" மதிப்பீடு அளிக்கப்பட்ட இக்கல்லூரியின் வளாகமானது மொத்தமாக 25 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.[3]

கல்லூரியின் வரலாறு

1966ம் ஆண்டு தமிழக அரசால், கரூர் பகுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது இக்கல்லூரி ஆகும். ஆரம்பிக்கப்பட்ட பொழுது சென்னை பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த இந்த கல்லூரி 5 இளங்கலை படிப்புகள் உடன் தொடங்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு வரை ஆண்கள் கல்லூரியாக மட்டுமே இருந்த இந்த கல்லூரி அதன்பின்பு இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டது. இதன்மூலம் ஆண்கள், பெண்கள் என கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த மாணவர்கள் இக்கல்லூரியின் மூலம் பயனடைந்து வருகின்றனர். 1984- 85 கல்வியாண்டு முதல் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரி 1988ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில அரசினால் இளங்கலை பட்டப்படிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கணினி அறிவியல் படிப்பினை தமிழ்நாட்டில் முதன்முறையாக கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்த்து பெருமை அடைந்தது. 2000ஆம் ஆண்டு முதல் கணினி படிப்புகள் அல்லாத மாணவர்களுக்கும் கணினி கற்பிக்கும் பாடத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.[4] 2001ஆம் ஆண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை குழுவினரால் மூன்று நட்சத்திர தகுதி பெற்றது. 2006ஆம் ஆண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை குழுவினரால் "'பி +'" தர சான்றிதழ் பெற்றது. அதே ஆண்டு தமிழ்நாடு மாநில அரசினால் சுயநிதி கல்வி பாடத்திட்டங்கள் அனைத்தும் பொதுப் பிரிவாக மாற்றப்பட்டு மாற்றப்பட்டு அதன்படி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். 2007ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய குழுவினரால் குழுவினரால் இந்த கல்லூரி தன்னாட்சி தகுதியினை அடைந்தது. 2014ஆம் ஆண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை குழுவினரால் பி+ தரத்திலிருந்து "ஏ" என்ற தரத்திற்கு இக்கல்லூரி உயர்த்தப்பட்டது. தன்னாட்சி தகுதியினை அடைந்தது முதல் இக்கல்லூரி படிப்படியாக தனது உள் கட்டுமானங்கள், நூலக வசதி, கல்லூரி அரங்கம், ஒவ்வொரு துறையினருக்கான தனித்தனி ஆய்வக வசதி, இணையவழி பயன்பாடுகள் என அனைத்திலும் முன்னேறி வருகிறது புள்ளியியல், நிலவியல் போன்ற பல்வேறு பாடத்திட்டங்களை தனது கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்த்து வருகிறது. முழுநேர மற்றும் பகுதிநேர முனைவர் ஆய்வு படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. மொத்தம் 17 பாடங்கள் இளங்கலை பிரிவிலும் 12 பாடங்கள் முதுகலை பிரிவிலும் இந்த கல்லூரியின் மூலம் கற்பிக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டு தமிழ், ஆங்கிலம் என மொழிப் பிரிவு கற்கும் மாணவர்களுக்கான ஆய்வு வசதி செய்து தரப்பட்டுள்ளது் ஒவ்வொரு வருடமும் தனது ஆசிரியர்களை பெருகிக்கொண்டே போகும் இந்த கல்லூரியில் தற்சமயம் 115 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 62 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவார். ஒவ்வொரு வருடமும் மாநில அளவில் கல்வி அளவிலும், விளையாட்டுகளிலும் இந்தக் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்று வருகின்றனர். மேலும் இந்த கல்லூரியிலன் தேசிய மாணவர் படை, புது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கல்லூரியில் 20க்கும் மேற்பட்ட அலுவலகப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்

வழங்கும் படிப்புகள்

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முனைவர் படிப்புகள்

தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், வணிகம் , இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் என மொத்தம் 11 பிரிவுகளில் முனைவர் பாடத்திட்டங்கள் இந்த கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.[5]

முதுகலை படிப்புகள்

தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், வணிகம் , இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், உயிரியல் கணினி அறிவியல் மற்றும் நிலவியல் என மொத்தம் 12 கலை, அறிவியல் மற்றும் பொருளாதார பிரிவுகளில் முதுகலை பாடத்திட்டங்கள் இந்த கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இளநிலைப் படிப்புகள்

தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், வணிகம் , இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், உயிரியல் கணினி அறிவியல், பட்டய கணக்காளர், நிலவியல், புள்ளியியல் மற்றும் வணிக மேலாண்மை என மொத்தம் 17 பிரிவுகளில் இளங்கலை பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

சேவைகள்

மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மட்டுமின்றி தனிப்பட்ட ஆர்வம், தனி நபர் மேலாண்மை போன்றவற்றையும் ஊக்குவிப்பதற்காக இந்த கல்லூரியால் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.[6] வங்கிப் பணிகள் மற்றும் அரசு பணிகளில் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்களுக்கு தனி வகுப்புகள் நடைபெறுகிறது. கணினி அல்லாத மாணவர்களுக்கு கணினி கற்பிக்கும் செயல்திட்டம் 2000 ஆண்டு முதல் முதல் நடந்து வருகிறது. மாணவர்கள் தங்கள் உடல்நலனை பராமரிக்க விளையாட்டுத் திடல், உடற்பயிற்சி நிலையம் போன்றவையும் மன நலனை சீராக வைத்துக்கொள்ள ஆலோசனை மையம், பெண்களுக்கான தனி சேவை மையம் போன்றவையும் இந்த கல்லூரியில் உள்ளது. இக் கல்லூரி நூலகத்தில் இணையவழி பயன்பாடு மூலமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது வருகிறது வருகிறது மேற்பட்ட நூல்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது வருகிறது வருகிறது. மாணவர்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கெடுக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. பேச்சுத்திறமை, தொடர்பு கொள்ளும் திறமை, மொழியறிவு அதிகரித்தல் என தனிநபர் மேலாண்மைக்கான செயல்பாடுகள் அனைத்திற்கும் குழு அமைக்கப்பட்டு மாணவர்கள் பங்கெடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். கல்லூரி படிப்பிற்கு பின்பான வேலைவாய்ப்பினை உறுதி செய்வதற்காக செய்வதற்காக உறுதி செய்வதற்காக செய்வதற்காக வேலைவாய்ப்பு மையமும் கல்லூரியில் கல்லூரியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது் அரசு உதவித் தொகைகள் சரியான மாணவர்களுக்கு சரியான மாணவர்களுக்கு தொகைகள் சரியான மாணவர்களுக்கு சென்று செய்யவும் வழிவகை வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3500 முதல் 4500[7] வரையிலான மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அனைத்து முயற்சிகளும் இந்த கல்லூரியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்

  1. தினமலர் கல்விமலர்
  2. கரூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்
  3. 25 ஏக்கரில் செயற்பட்டுவரும் கரூர் அரசினர் கலைக்கல்லூரி
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-20. Retrieved 2019-12-22.
  5. https://gackarur.ac.in/programmes.php
  6. https://gackarur.ac.in/facilities.php
  7. https://gackarur.ac.in/students.php

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya