நூருல் இசுலாம் பல்கலைக்கழகம் (Noorul Islam University) முன்னதாக நூருல் இசுலாம் பொறியியல் கல்லூரி, தமிழ்நாட்டின் தென்முனையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்தக்கலைக்கு அருகே குமாரகோவிலில் அமைந்துள்ள தனியார் இருபாலர் பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தை 1989இல் முனை. ஏ.பி. மஜீத்கான் என்பார் நிறுவினார்; இவர் தற்போது இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பிலுள்ளார். மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதை தனது இலக்காக இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.
சிறப்புச் செயல்பாடு
நூருல் இசுலாம் பல்கலைக்கழகம் (NIU) அரசின் உதவியுடன் தனது செயற்கைக்கோளை விண்ணேற்ற திட்டமிட்டுள்ளது. ரூ.5-கோடி செலவுள்ள இந்தத் திட்டம் வேளாண்மை பயன்பாடுகளுக்கும் உயர்கல்வி மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும். இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் பணியாளர்கள் 18 பேர் மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர். [1]