இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி (IIITT) மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தினால் முன்மொழியப்பட்ட இலாபநோக்கமற்ற பொது-தனியார் கூட்டுறவு (பிபிபி) மாதிரியின் கீழ் அமைக்கப்பட்ட 20 ஐஐஐடிடிகளுல் ஒன்றாகும். IIITT ஒரு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது முழுமையாக இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் தொழிலக பங்குதாரர்கள் இணைந்து செய்யப்படும் நிதிபங்களிப்பினால் இயங்குகிறது, இதன் பங்கு விகிதம் முறையே 50:35:15 ஆகும். தொழிலக பங்குதாரர்களாக தனியார் தொழில்நுட்ப கம்பெனிகளான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (சி. டி. எஸ்), இன்போசிஸ், ராம்கோ சிஸ்டம்ஸ், எல்காட், மற்றும் நவிடாஸ் (Take Solutions) ஆகியன திருச்சி ஐஐஐடிடியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் இந்திய ஐ.டி துறையிலுள்ள சவால்களை எதிர்கொள்ள மற்றும் உள்நாட்டு ஐடி சந்தையின் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காக நிறுவப்பட்டுள்ளது. இது 2017 முதல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.[1] [2] [3] [4] நோக்கம்ஐ.ஐ.ஐ.டி.டியை நிறுவுவதின் முக்கிய நோக்கமானது, இந்தியக் கல்வியில் ஒரு மாதிரியை உருவாக்குவதும், தகவல்தொழில்நுட்ப துறையினில் சிறந்த முறையில் மனித வளங்களை உருவாக்குவதோடு, பல்வேறு களங்களில் தகவல்தொழில்நுட்பத்தின் பல பரிமாணங்களை அணிதிரட்டுவதாகும். MHRDஆனது அனைத்து ஐ.ஐ.ஐ.டி.டிக்களுக்கும் ஒர் பொதுவான நோக்கத்தினை உருவாக்கியுள்ளது. இது குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை பயிற்றுவித்தபொழுதும், அவர்களினால் ஏற்படும் தாக்கம் பெரிதாக இருக்கும் என நம்பப்படுகிறது. [5] வளாகம்தற்காலிக வளாகம்ஐஐஐடிடி திருச்சி, தற்பொழுது தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வளாகத்தில் செயற்பட்டுவருகிறது.[6] நிரந்தர வளாகம்ஐஐஐடிடி நிரந்தர வளாகத்திற்கான இடம் திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகாவிலுள்ள சேதுராப்பட்டி கிராமத்தில் சுமார் 56 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது, இது திருச்சி ஜங்ஷனிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் விராலிமலை நகரிலிருந்து 15 கி.மீ தொலைவிலும், திருச்சி முதல் மதுரை வரை செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமையவிருக்கிறது. இதற்கான நிலங்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கட்டுமானத்திற்கு தயாராக உள்ளது. முழுத் திட்டம் பூர்த்தியாகியுள்ளது.
சேர்க்கை மற்றும் கல்வியாளர்கள்ProgramsIIITT இரண்டு இளங்கலை மற்றும் மூன்று முதுகலை படிப்புகளை பின்வரும் பிரிவுகளில் வழங்குகிறது:
B. Tech படிப்புக்கான மாணவர் சேர்க்கை JEE-Main தேர்வு மூலம் செய்யப்படுகிறது. M. Tech மாணவர் சேர்க்கை கேட் மூலம் செய்யப்படுகிறது. பாடத்திட்டத்தைThe M.Tech. Curriculum has following components:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia