கோலா கிராவ் மக்களவைத் தொகுதி
கோலா கிராவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Krau; ஆங்கிலம்: Kuala Krau Federal Constituency; சீனம்: 瓜拉吉挠国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், மாரான் மாவட்டம்; தெமர்லோ மாவட்டம்; ஜெராண்டுட் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P087) ஆகும்.[5] கோலா கிராவ் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து கோலா கிராவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] மாரான் மாவட்டம்மாரான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் மாரான். முன்பு மாரான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பெரா மாவட்டம் 1981-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டம் பகாங் மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இதைச் சுற்றி குவாந்தான் மாவட்டம், பெக்கான் மாவட்டம், ரொம்பின் மாவட்டம், பெரா மாவட்டம், தெமர்லோ மாவட்டம், ஜெராண்டுட் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. 1981 சனவரி மாதம்; மாரான் நகரம், தெமர்லோ மாவட்டத்தின் புக்கிட் செகும்பல் (Mukim Bukit Segumpal), செனோர் (Chenor), கெர்த்தாவ் (Kertau) ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு புதிய மாரான் மாவட்டம் உருவாக்கப்பட்டது. கோலா கிராவ் மக்களவைத் தொகுதி
கோலா கிராவ் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia