ரவுப் மக்களவைத் தொகுதி
ரவுப் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Raub; ஆங்கிலம்: Raub Federal Constituency; சீனம்: 劳勿国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், ரவுப் மாவட்டத்தில் (Raub District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P080) ஆகும்.[6] ரவுப் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து ரவுப் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7] ரவுப் மாவட்டம்ரவுப் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் ரவுப். பகாங் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ரவுப் மாவட்டத்தின் கிழக்கில் சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தைச் சுற்றிலும், பகாங் மாநிலத்தின் லிப்பிஸ் மாவட்டம், ஜெராண்டுட் மாவட்டம், தெமர்லோ மாவட்டம், பெந்தோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் பிரேசர் மலை மற்றும் பத்து தாலாம். தித்திவாங்சா மலைத்தொடர், மற்றும் பெனோம் மலைத்தொடர் ஆகியவற்றுக்கு இடையே இந்த மாவட்டம் அமைந்துள்ளது. ரவுப்ரவுப் மாவட்டத்தில், 19-ஆம் நூற்றாண்டில், தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்கு 1889-ஆம் ஆண்டில் ’ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்கம்’ (Raub Australian Gold Mine) தோற்றுவிக்கப் பட்டது. பேராக், சிலாங்கூர், பகாங் மாநிலங்களில் வாழ்ந்த மக்கள் பலர், ரவுப் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்வதற்குச் சென்றனர். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில், தங்கம் தோண்டுவதில் ரவுப் மாவட்டம் பிரசித்தி பெற்று விளங்கியது. ரவுப் ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க நிறுவனம் (Raub Australian Gold Mine) எனும் நிறுவனம் 1889-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கியது. ரவுப் மக்களவைத் தொகுதி
ரவுப் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia