லிப்பிஸ் மக்களவைத் தொகுதி
லிப்பிஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lipis; ஆங்கிலம்: Lipis Federal Constituency; சீனம்: 立卑国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், லிப்பிஸ் மாவட்டத்தில் (Lipis District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P079) ஆகும்.[5] லிப்பிஸ் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து லிப்பிஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] லிப்பிஸ் மாவட்டம்லிப்பிஸ் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் கோலா லிப்பிஸ். பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது. பகாங் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் கோலா லிப்பிஸ் நகரமும் ஒன்றாகும். கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; குவாந்தான் நகரில் இருந்து 235 கி.மீ. தொலைவிலும் இந்த நகரம் உள்ளது. கோலா லிப்பிஸ்லிப்பிஸ் மாவட்டத்திற்கு மேற்கில் கேமரன் மலை, கிழக்கில் ஜெராண்டுட்; வடக்கில் ரவுப் ஆகிய நகரங்கள் உள்ளன. அத்துடன் கிழக்கில் பேராக் மாநிலம்; வடக்கில் கிளாந்தான் மாநிலம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. கோலா லிப்பிஸ் நகரம் 1898-ஆம் ஆண்டில் இருந்து 1955-ஆம் ஆண்டு வரை 57 ஆண்டுகளுக்கு பகாங் மாநிலத்தின் நிர்வாகத் தலைநகராக இருந்தது. அதன் பின்னர் குவாந்தான் புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஈயம், தங்கம் போன்ற கனிமங்கள் மற்றும் காட்டுப் பொருட்களின் விளைச்சல்களுக்கு லிப்பிஸ் மாவட்டம் பெயர் பெற்றது. லிப்பிஸ் மக்களவைத் தொகுதி
லிப்பிஸ் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia