கேமரன் மலை மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Cameron Highlands; ஆங்கிலம்: Cameron Highlands Federal Constituency; சீனம்: 金马伦高原联邦选区) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், கேமரன் மலை மாவட்டத்தில் (Cameron Highlands District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P078) ஆகும்.[8]
கேமரன் மலை மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
முன்பு கேமரன் மலை என்பது அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கேமரன் மலை மாவட்டத்தின் தலை நகரம் தானா ராத்தா. பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது. இந்த மாவட்டம் மலேசியாவிலேயே அதிகமான மலைக் கிராமங்களைக் கொண்ட ஒரு மலைப்பகுதியாகும்.
பகாங் மாநிலத்தின் மிகச் சிறிய மாவட்டமாக, அதன் மேற்கு எல்லையில் கேமரன் மலை உள்ளது. இது ஒரு சுகமான சுற்றுலாத் தளம் ஆகும். வருடம் முழுமையும் குளிராகவே இருக்கும்.
இங்கே நிறைய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான காய்கறித் தோட்டங்களும் உள்ளன. தமிழர்களும் கணிசமான அளவிற்கு விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர்.
கேமரன் மலை வரலாறு
கேமரன் மலைப்பகுதி 1200 - 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வில்லியம் கேமரன் (ஆங்கிலம்: Sir William Cameron) எனும் பிரித்தானிய நில ஆய்வாளரின் நினைவாக கேமரன் மலை அல்லது கேமரன் ஆய்லண்ட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.[10]
1885-ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் ஓய்வுத்தளமாக விளங்கிய இந்த கேமரன் மலை, 1925-ஆம் ஆண்டுக்குப் பிறகு விவசாயத் துறையில் பிரசித்திப் பெறத் தொடங்கியது.[11]
கேமரன் மலை வாக்குச் சாவடிகள்
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), கேமரன் மலை மக்களவை தொகுதி 29 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[12]
நகரம் - நகராட்சி - (மலாய்: Majlis Perbandaran; ஆங்கிலம்: Municipal Council); எ.கா. காஜாங் நகராட்சி)
கிராமப்புறம் - மாவட்ட ஊராட்சி - (மலாய்: Majlis Daerah; ஆங்கிலம்: District Council); எ.கா. உலு சிலாங்கூர் ஊராட்சி)
சிறப்பு உள்ளாட்சி - நகராண்மைக் கழகம் - மேம்பாட்டுக் கழகம் - (மலாய்: Pihak Berkuasa Tempatan; ஆங்கிலம்: Corporation; Development Board; Development Authority); எ.கா. புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம்)