தெமர்லோ மக்களவைத் தொகுதி
தெமர்லோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Temerloh; ஆங்கிலம்: Temerloh Federal Constituency; சீனம்: 淡马鲁国会议席) என்பது மலேசியா, பகாங், மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P088) ஆகும்.[5] தெமர்லோ மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து தெமர்லோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] தெமர்லோ மாவட்டம்தெமர்லோ மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 130 கி.மீ. தூரத்தில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது. தெமர்லோ மாவட்டம்; கிழக்கில் மாரான் மாவட்டம், மேற்கில் பெந்தோங் மாவட்டம், வடக்கில் ஜெராண்டுட் மாவட்டம் மற்றும் தெற்கில் பெரா மாவட்டம் ஆகிய மாவட்டங்களை எல்லையாகக் கொண்டு உள்ளது. குவாந்தான் மாநகருக்கு அடுத்த மிகப் பெரிய பட்டணமாக தெமர்லோ விளங்குகிறது. மாநகர் ஆட்சியின் கீழ் உள்ள தெமர்லோ மாவட்டம், மெந்தகாப், லஞ்சாங், கோலா கெராவ், மற்றும் கெர்டாவ் ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது. தெமர்லோ மக்களவைத் தொகுதி
தெமர்லோ தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia