பெந்தோங் மக்களவைத் தொகுதி
பெந்தோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bentong; ஆங்கிலம்: Bentong Federal Constituency; சீனம்: 文冬国会议席) என்பது மலேசியா, பகாங், மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P089) ஆகும்.[5] பெந்தோங் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து பெந்தோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] பெந்தோங் மாவட்டம்பெந்தோங் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் அமைந்து உள்ளது. இந்த மாவட்டத்தின் மேற்கில் சிலாங்கூர் மாநிலம்; தெற்கில் நெகிரி செம்பிலான்; மாநிலம்; எல்லைகளாக உள்ளன. 1,831 கி.மீ² பரப்பளவில், கெந்திங் மலை மற்றும் புக்கிட் திங்கி மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியது. தித்திவாங்சா மலைத்தொடர் கிழக்குப் பகுதியில் படர்ந்து செல்கிறது. முன்பு காலத்தில் ரவுப் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பெந்தோங் மாவட்டம் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 1919-இல் மாவட்டத்தின் பெரிய அளவு காரணமாக நிர்வாகம் பிரிக்கப்பட்டது. தற்போது பெந்தோங் மாவட்டம் 183,112.35 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. பெந்தோங் மக்களவைத் தொகுதி
பெந்தோங் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia