சல்பர் மஸ்டர்ட்சல்பர் மஸ்டர்ட் (Sulfur mustard) பொதுவாக மஸ்டர்ட் வாயு என்றழைக்கப்படுகிறது. இவை சைடோடாக்சிக் குடும்பத்தில் சல்பர் சார்ந்த ஒரு முன்மாதிரிப் பொருள். இவை போர்களில் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் ஆயுதம் ஆகும். இவ்வேதிப்பொருள் தோலில் பெரும் கொப்பளங்களை உருவாக்கக் கூடியது. மேலும் நுரையீரலைப் பாதிக்கக் கூடியது.[1] தூய சல்பர் மஸ்டர்ட் அறை வெப்ப நிலையில் நிறமற்றவை மற்றும் பிசுபிசுப்பான திரவம் ஆகும். ஆனால் போர் ஆயுதமாக கலப்படத்தோடு பயன்படுத்துகையில் பழுப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. மேலும் அதன் நறுமணம் பூண்டு, கடுகுச் செடி (mustard plant) வாசனை கொண்டுள்ளது. எனவே இதற்குப் பெயர் மஸ்டர்ட் வாயு எனப்பட்டது. இவை 1993 வேதியல் ஆயுத உடன்பாட்டின்படி ஒழுங்குமுறை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை சுற்றுச்சூழலில் இருந்து பிரித்தெடுக்க குளோரமைன் - டி பயன்படுகிறது.[2] சேர்க்கை மற்றும் எதிர்வினைசல்பர் மஸ்டர்ட் வேதியியல் பார்முலா : (ClCH2CH2)2S டெப்ரட்ஸ் முறை :
மேயர் முறை :
மேயர் - க்ளார்க் முறை : (HOCH2CH2)2S + 2 HCl → (ClCH2CH2)2S + 2 H2O உடலியல் விளைவுகள்கொப்பளங்கள் ஏற்படுத்துபவை. புற்றுநோய் உண்டாக்கக் கூடியவை. பாதிப்புகள் உடனே தெரிவதில்லை. 24 மணி நேரம் கழித்து தோலில் அரிப்பு எரிச்சல் போன்றவை உண்டாகும். இவ்வாயு உடைகளை எளிதாகக் கடந்து சென்று உடலை பாதிக்கக் கூடியவை. மேலும் கண்களைப் பாதித்து பார்வை இழக்கவும் நேரிடும். இவ்வாயுக்களை அதிகமாக சுவாசிக்கும் போது சுவாச மண்டலத்தில் இரத்தக் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. உருவாக்கம்இவை HS, HD, HT, Hட ,HQ போன்ற பல்வேறு கலவைகளில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. வரலாறுமுதன்முதலாக 1822 ல் சீசர் - மான்சூட் - டெஸ்ப்ரட்ஸால் உருவாக்கப்பட்டது.[5] முதன்முதலில் 1917ம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பெல்ஜியத்தில் பிரித்தானிய மற்றும் கனடா இராணுவ வீரர்களுக்கு எதிராக ஜெர்மனி இவ்வாயுவை ஆயுதமாகப் பயன்படுத்தியது. அதற்குப் பின்னால் பல்வேறு போர்களில் இவை பயன் படுத்தபபட்டன. இவ்வாறு பயன்படுத்துவது, இவற்றின் உருவாக்கம், விற்பனை, சேமிப்பு ஆகியவை 1925 ஜெனிவா நெறிமுறை மற்றும் 1933 வேதியல் ஆயுத உடன்பாடு போன்றவற்றால் தடை செய்யப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவரவாத அமைப்பு இவற்றை உற்பத்தி செய்து சிரியா மற்றும் ஈராக்கில் பயன்படுத்துவதாக செப்டம்பர் 2012ல் அமெரிக்கா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.[6][7][8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia