இருகந்தகம் இருபுரோமைடு
இருகந்தகம் இருபுரோமைடு (Disulfur dibromide) S2Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். மஞ்சள்-பழுப்பு நிறத்தில் திரவமாக இருகந்தக இருபுரோமைடு காணப்படுகிறது. காற்றில் இது புகையும். தனிமங்களின் நேரடி சேர்க்கையால் இருகந்தக இருபுரோமைடு தயாரிக்கப்பட்டு வெற்றிட காய்ச்சி வடித்தல் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.[1] தொடர்புடைய கந்தகச் சேர்மமான இருகந்தகம் இருகுளோரைடு போலல்லாமல், இச்சேர்மத்திற்கென்று குறிப்பிட்ட பயன்பாடு ஏதும் இல்லை. இருகந்தகம் இருகுளோரைடு (S2Cl2) போன்றே இதன் மூலக்கூறு அமைப்பும் Br−S−S−Br ஆகும். எலக்ட்ரான் விளிம்பு விளைவு அளவீடுகளின்படி, Bra−S−S மற்றும் S−S−Brb தளங்களுக்கு இடையிலான கோணம் 84° ஆகவும் Br−S−S கோணம் 107° ஆகவும் காணப்படுகிறது. S−S பிணைப்பு இடைவெளி 198.0 பைக்கோமீட்டர்களாகும். இந்த அளவு S2Cl2 சேர்மத்தை விட சுமார் 5.0 பைக்கோமீட்டர் குறைவாகும்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia