அமோனியம் ஐதரோசல்பைடு
அமோனியம் ஐதரோசல்பைடு (Ammonium hydrosulfide) என்பது (NH4)SH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்கக்கூறுகள்அமோனியம் நேர்மின் அயனியும் ஐதரோசல்பைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து அமோனியம் ஐதரோசல்பைடு உப்பு உருவாகிறது. நிறமற்றதாகவும் நீரில் கரையக்கூடியதாகவும், மைக்காவை ஒத்த படிகங்களாகவும் இவ்வுப்பு காணப்படுகிறது. புவியில் திண்மமாகக் கிடைக்காமல் பிரதானமாகக் கரைசலாகவே கிடைக்கிறது. ஆனால் NH4SH பனிக்கட்டியாக வாயு நிரம்பிய மாபெரும் கிரகங்களான வியாழன் மற்றும் சனி கோள்களின் மேகத் தளங்களில் கணிசமான பகுதியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சில கிரகங்களின் மேகங்களுக்கு உள்ள வண்ணம் ஒளிப்பகுப்பால் உருவாக்கப்படும் கந்தகம் காரணமாக இருக்கலாம். அங்கெலாம் ஐதரசன் சல்பைடு மற்றும் அம்மோனியா கலப்பதால் அமோனியம் ஐதரோசல்பைடு உருவாகிறது. தயாரிப்பு முறைஅடர்த்தியான அமோனியா கரைசலில் ஐதரசன் சல்பைடு வாயுவை செலுத்துவதனால் அமோனியம் ஐதரோசல்பைடு கரைசல் கிடைக்கிறது [3]. ஐதரசன் சல்பைடு அடர்த்தியான அமோனியா நீர்க்கரைசலுடன் அறைவெப்பநிலையில் வினைபுரிந்து (NH4)2S•2NH4HS சேர்மத்தைக் கொடுப்பதாக 1895 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விரிவான அறிக்கை கூறுகிறது. இவ்வுப்பை 0 °செல்சியசு வெப்பநிலைக்கு குளிரவைத்து கூடுதலாக ஐதரசன் சல்பைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் (NH4)2S•12NH4HS கிடைக்கிறது.[4] பனிக்குளிர் நிலையிலுள்ள இக்கரைசல் 0 °செல்சியசு வெப்பநிலையில் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தினால் ஐதரோசல்பைடு கிடைக்கிறது. முடைநாற்றமுடைய இச்சேர்மத்தில் அமோனியம் சல்பைடு கரைசல் கலந்துள்ளது. எளிமையாக இதை அமோனியாவாகவும் ஐதரசன் சல்பைடு வாயுவாகவும் மாற்ற முடியும். இதை பின்வரும் சமன்பாடு விளக்குகிறது. (NH4)SH⇌ NH3 + H2S அமோனியா மற்றும் ஐதரசன் சல்பைடு ஆகிய இரண்டு வாயுக்களும் கடுமையான விரும்பத்தகாத மணம் வீசுபவைகளாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia