சவாய் மாதோபூர் மாவட்டம்![]() சவாய் மதோபூர் மாவட்டம் (Sawai Madhopur district) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். சவாய் மாதோபூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்தியாவிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட 640 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். பனாஸ் ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது. அமைப்புஇம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே டெளசா மாவட்டமும், வடகிழக்கே கரெளலி மாவட்டமும் மேற்கே சம்பல் நதியும், தென்மேற்கே கோட்டா மாவட்டமும், தென்கிழக்கே புந்தி மாவட்டமும் கிழக்கே டோங் மாவட்டமும் அமைந்துள்ளது. வட்டங்கள்சவாய் மதோபூர் மாவட்டம் 5 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மாவட்டப் பிரிப்புஇம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிய கங்காபூர் மாவட்டம் நிறுவப்பட்டது.[1] மக்கள் தொகை2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 13,38,114 ஆகும்.[2] இது மொரீசியஸ் நாட்டின் மக்கள் தொகைக்குச் சமமாகும்.[3] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 297 எனும் வீதத்தில் உள்ளது.[2] கல்வியறிவு 66.19% ஆகும்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia