இராம்பாக் அரண்மனை, ஜெய்ப்பூர்
இராம்பாக் அரண்மனை (Rambagh Palace) ராஜஸ்தானின் செய்ப்பூரிலிருந்த ஜெய்ப்பூர் அரசனின் முன்னாள் குடியிருப்பு ஆகும். இது பவானி சிங் சாலையில் ஜெய்ப்பூர் நகரின் சுவர்களுக்கு வெளியே 5 மைல் (8.0 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. வரலாறுதளத்தின் முதல் கட்டிடம் 1835ஆம் ஆண்டில் இளவரசன் இரண்டாம் இராம் சிங்கை பராமரித்த ஒரு செவிலியரின் தோட்ட வீடாகும்.[1] 1887ஆம் ஆண்டில், மகாராஜா சவாய் மாதோ சிங்கின் ஆட்சிக் காலத்தில், இந்த வீடு ஒரு அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்திருந்ததால், இது ஒரு சாதாரண அரச வேட்டை மாளிகையாக மாற்றப்பட்டது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இது சர் சாமுவேல் ஸ்விண்டன் ஜேக்கப்பின் வடிவமைப்புகளால் அரண்மனையாக விரிவுபடுத்தப்பட்டது.[2] மகாராஜா இரண்டாம் மன்சிங் இந்த அரண்மனையை தனது பிரதான இல்லமாக மாற்றினார். மேலும், 1931இல் இதில் பல அறைகளையும் சேர்த்தார். இது இப்போது தாஜ் ஹோட்டல் குழுமத்தால் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியாக இயக்கப்படுகிறது. ஒரு அமெரிக்க ஒளிபரப்பு பத்திரிகையாளரும், அரசியல் வர்ணனையாளருமான ஆண்டர்சன் கூப்பர் 2009 இல் இராம்பாக் அரண்மனையில் தங்கினார்.[3] இதனையும் காண்க
மேற்கோள்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia