பிரதாப்காட் மாவட்டம்
பிரதாப்காட் மாவட்டம் (Pratapgarh district) (இந்தி: जिला प्रतापगढ़) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பிரதாப்காட் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் உதய்பூர் கோட்டத்தில் உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் 33-வது மாவட்டமாக பிரதாப்காட் மாவட்டம் 26 சனவரி 2008-இல், சித்தோர்கார் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு நிறுவப்பட்டது.[1] இராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் தொகை குறைந்த மாவட்டங்களில் இம்மாவட்டம் ஜெய்சல்மேர் மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.[2] அமைவிடம்பிரதாப்காட் மாவட்டத்தின் வடக்கில், சித்தோர்கார் மாவட்டம் வடகிழக்கில் நீமச் மாவட்டம், இராஜஸ்தான், கிழக்கில் மண்டசௌர் மாவட்டம், (மத்தியப் பிரதேசம்), தென்கிழக்கில் ரத்லம் மாவட்டம், (மத்தியப் பிரதேசம்), தென்மேற்கில் பான்ஸ்வாரா மாவட்டம், மேற்கில் டுங்கர்பூர் மாவட்டம், வடமேற்கில் உதய்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது. புவியியல்பிரதாப்காட் கடல் மட்டத்திலிருந்து 580 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆரவல்லி மலைத்தொடர் மற்றும் மால்வா மேட்டுநிலங்களின் சந்திப்பில் பிரதாப்காட் மாவட்டம் அமைந்துள்ளது. 4,11,736 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 1,20,976 ஹெக்டர் ஆகும். மாவட்ட நிர்வாகம்பிரதாப்காட் மாவட்டம் அர்னோட், சிஹோட்டி சத்ரி, தாரியாவாட், பீபல் கூண்ட் மற்றும் பிரதாப்காட் என ஐந்து வருவாய் வட்டங்களையும், 921 கிராமங்களையும் கொண்டுள்ளது. மக்கள் தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 867,848 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 91.73% மக்களும்; நகரப்புறங்களில் 8.27% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 22.78% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 437,744 ஆண்களும்; 430,104 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 983 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 4,449 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 195 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 55.97% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 69.50% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 42.35% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 150,518 ஆக உள்ளது. [3] சமயம்இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 827,293 (95.33 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 25,597 (2.95 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 14,077 (1.62 %) ஆகவும்; சீக்கிய சமய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது. மொழிகள்இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. பொருளாதாரம்இம்மாவட்டத்தின் முக்கிய வேளாண் பயிர்கள் நிலக்கடலை, சோளம், சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், தாணியங்கள், ஆமணக்கு, பார்லி, கோதுமை ஆகும். இம்மாவட்டத்தில் அரசு உரிமம் பெற்ற அபின் பயிரிடுவோர் 6,781-ஆக உள்ளனர். இந்திய அரசின் போதை மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அறிக்கையின் படி, பிரதாப்காட் மாவட்டத்தில் 2011-ஆம் ஆண்டில் 15,85,373 கிலோ கிராம் அளவிற்கு அபின் உற்பத்தி செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. மேற்கோள்கள்
http://epaper.dainiknavajyoti.com/?edition=16&pub_date=21/05/2014&pageno=8 பரணிடப்பட்டது 2017-06-30 at the வந்தவழி இயந்திரம் வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia